இந்த லேட்பாப்பின் விலை ரூ.2,13,894 .. அடேயப்பா என்னென்ன சிறப்பு இருக்குது தெரியுமா?

ரூ.50,000 முதல் நல்ல லேப்டாப் சந்தையில் கிடைத்து வரும் நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் Apple MacBook Pro 14 என்ற லேப்டாப் விலை ரூ.2,13,894 என்ற தகவல் பெறும் ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும் அந்த பணத்திற்கு ஏற்ப சிறப்பு வசதிகள் அதில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த லேப்டாப் குறித்த சிறப்பு அம்சங்கள் குறித்து தற்போது பார்ப்போம்.

Apple MacBook Pro 14 என்ற லேப்டாப் மெரிக்காவில் $1,999 என்ற விலையிலும் இந்தியாவில் ரூ.2,13,894 என்ற விலையிலும் விற்பனையாகிறது. மேலும் க்ரோமாவில் வாங்கினால் சில வங்கி சலுகைகளும் உண்டு. இந்த நிலையில் இந்த லேப்டாப்பின் சிறப்பம்சஙக்ள் குறித்த தகவல் இதோ:

3024×1964 தெளிவுத்திறனுடன் 14.2-இன்ச் லிக்விட் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளே

16ஜிபி அல்லது 32ஜிபி ரேம்

2GB, 1TB, 2TB, 4TB, அல்லது 8TB SSD ஸ்டோரேஜ்

மூன்று தண்டர்போல்ட் 4 போர்ட்கள், HDMI போர்ட், SDXC கார்டு ஸ்லாட், ஹெட்ஃபோன் ஜாக், MagSafe 3 போர்ட் ஆகிய வசதிகள்

18 மணிநேர வீடியோ விளையாடும் அளவுக்கு அல்லது 12 மணிநேர வயர்லெஸ் இணைய பணிகள் செய்யும் அளவுக்கு தாங்கும் பேட்டரி.

இந்த லேப்டாப்பில் உள்ள சிப், முந்தைய தலைமுறை மேக்புக் ப்ரோஸை விட 70% வேகமான CPU செயல்திறனையும் 3x வேகமான GPU செயல்திறனையும் கொண்டது.

இதில் உள்ள லிக்விட் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளே 1600 நிட்களின் உச்ச பிரகாசம் மற்றும் 1,000,000:1 என்ற மாறுபட்ட விகிதத்தைக் கொண்டுள்ளது. இது HDR அம்சம் கொண்டது

இதில் உள்ள MagSafe 3 என்ற போர்ட் பாரம்பரிய USB-C போர்ட்களை விட வேகமான சார்ஜிங் மற்றும் அதிக பாதுகாப்பான இணைப்புகளை வழங்குகிறது. அதேபோல் 1080p FaceTime HD கேமரா இதில் உள்ளதால் இந்த கேமரா முந்தைய தலைமுறை MacBook Pros ஐ விட சிறந்த பட தரத்தை வழங்குகிறது. மேலும் 6 ஸ்பீக்கர் ஒலி அமைப்பு இருப்பதால் துல்லியமான ஒலி கிடைக்கும்.

மொத்தத்தில் Apple MacBook Pro 14 ஒரு சக்திவாய்ந்த லேப்டாப் ஆகும். இது தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஏற்றது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews