ஆப்பிள் ஐபோன் பிளிப்கார்ட்டில் வெறும் ரூ.2,749 தானா? ஆச்சரிய தகவல்..!

ஆப்பிள் ஐபோனின் புதிய வெர்ஷன் மாடல்கள் வெளியாகும் போது பழைய மாடல்களின் விலை தலைகீழாக சரியும் என்பது தெரிந்தது. அந்த வகையில் விரைவில் ஆப்பிள் ஐபோன் 15 வெளியாக இருக்கும் நிலையில் ஆப்பிள் ஐபோன் 11 மிகக் குறைந்த விலையில் அதாவது ரூபாய் 2,749 என்ற விலையில் பிளிப்கார்ட்டில் கிடைக்கும் என்ற ஆச்சரிய தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த முழு விபரங்களை தற்போது பார்ப்போம்.

ஆப்பிள் ஐபோன் 11 தற்போது பிளிப்கார்ட்டில் ரூ.36,250 தள்ளுபடிக்கு பின் வெறும் ரூ.2,749க்கு கிடைக்கிறது. ஆப்பிள் ஐபோன் 11 இன் அசல் விலை ரூ.38,999. ஆனால் பிளிப்கார்ட் நிறுவனம் இதன் விலையை ரூ.4,901 குறைத்து ரூ.34,098 என விற்பனை செய்கிறது. அதோடு HDFC வங்கியின் கிரெடிட் கார்டு EMI பரிவர்த்தனைகளில் ரூ.1,250 தள்ளுபடியைப் பெறலாம். இதனால் இதன் விலை ரூ.32,848 ஆகக் குறைக்கப்படும். மேலுன் உங்களிடம் பழைய ஸ்மார்ட்போன் இருந்தால் அதி எக்ஸ்சேஞ்ச் செய்வதன் மூலம் அதிகபட்சமாக உங்களுக்கு ரூ.35,000 வரை கிடைக்கும். எனவே அதையும் கழித்தால் இப்போது நீங்கள் ஆப்பிள் ஐபோன் 11ன் விலை வெறும் ரூ.2,749 என ஆகிறது.

பிளிப்கார்ட்டில் ஆப்பிள் ஐபோன் 11ஐ 2,749 ரூபாய்க்கு பெறுவது எப்படி என்பது குறித்து தற்போது பார்ப்போம்.

1. பிளிப்கார்ட்இணையதளம் செல்லவும்.
2. “iPhone 11″ஐ தேடவும்.
3. “iPhone 11” தயாரிப்பு பக்கத்தில் கிளிக் செய்யவும்.
4. Buy என்பதை கிளிக் செய்யவும்.
5. “HDFC வங்கி கிரெடிட் கார்டு EMI” கட்டண விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
6. உங்கள் HDFC வங்கி கிரெடிட் கார்டு விவரங்களை உள்ளிடவும்.
7. Apply Discount என்பதை கிளிக் செய்யவும்.
8. உங்கள் பழைய ஸ்மார்ட்போனின் IMEI எண்ணை உள்ளிடவும்.
9. Submit என்பதை கிளிக் செய்யவும்.

iPhone 11 உங்களுக்கு டெலிவரி சார்ஜ் இல்லாமல் 7-10 நாட்களுக்குள் அனுப்பப்படும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...