காதல் கோட்டை படம் இப்படித்தான் உருவாச்சா? அஜீத் சினிமா வாழ்க்கைய மாற்றிய அந்த தருணம்

நடிகர் அஜீத்தின் சினிமா வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க படம் என்று சொன்னால் அது காதல் கோட்டை படம் தான்.  இந்தப் படத்திற்குப் பின்னரே அஜீத் தமிமிழ சினிமாவின் நட்சத்திர நாயகனாக உயர்ந்தார். 1996-ல் வெளியான இந்தப்படம்  பல விருதுகளைப் பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது.

இந்தப் படத்தினை இயக்கியவர் இயக்குநர் அகத்தியன். அதற்கு முன் இயக்குநர் அகத்தியன் மதுமதி என்ற திரைப்படத்தினை இயக்கியிருந்தார். இந்தத்திரைப்படம் அப்போது சுமாரான வெற்றியைப் பெற்றது. குறிப்பாக இரண்டாம் கட்ட ரிலீசில் படம் வெற்றியைப் பெற்றது. அப்போது பாண்டியன் என்பவர் திரைப்பட விநியோகம் தொடர்பான தொழிலில் ஈடுபட்டபோது மதுமதி படம் இவருக்கு நல்ல லாபத்தைக் கொடுத்திருக்கிறது. மேலும் இவர் சென்னையில் சிவசக்தி என்ற திரையரங்கத்தினையும் குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தார்.

இந்நிலையில் மதுமதி படத்தின் விமர்சனங்களால் தான் ஒரு படத்தினைத் தயாரிக்க விரும்பி மதுமதி படத்தின் இயக்குநரான அகத்தியனை அழைத்து கதை கேட்டிருக்கிறார். அப்போது அவர் காதல் கோட்டை கதையைச் சொல்லியிருக்கிறார். ஆனால் இந்தக் கதை அவருக்குப் பிடிக்கவில்லை. அகத்தியன் இந்தக் கதையை அதற்குமுன் பல தயாரிப்பாளர்களிடம் சொன்னபோதும் யாரும் தயாரிக்க முன்வரவில்லை.

இந்நிலையில் சிவசக்தி பாண்டியன் அகத்தியனிடம் தாங்கள் இதற்குமுன் எடுத்த மதுமதி படத்தினை அப்படியே அதை கதையை மீண்டும் இயக்குங்கள் என்று கூறியிருக்கிறார். அப்போது அகத்தியன் மீண்டும் அஜீத்தை வைத்து மதுமதி கதையை வான்மதி என்ற படமாக்க அந்தப் படமும் அவருக்கு லாபத்தைக் கொடுத்திருக்கிறது.

மாமன்னன் பாடலைப் பாட மறுத்த வடிவேலு.. ஏ.ஆர்.ரஹ்மான் செய்த அந்த ஒரு மேஜிக்

எனவே மீண்டும் அகத்தியனுடன் இணைந்து நீங்கள் முன்னர் ஒரு கதையைக் கூறினீர்களே.. இருவரும் பார்க்காமல் காதலிப்பார்கள் என்று அந்தக் கதையை இப்போது படமாக எடுங்கள். மீண்டும் நானே தயாரிக்கிறேன் என்று கூற காதல் கோட்டை உருவானது. அதன்பின் காதல் கோட்டை படம் வெளியாகி பெற்ற வெற்றியை தமிழ் சினிமா உலகமே அறியும்.

அஜீத்துக்கு சினிமாவில் திருப்புமுனை கொடுத்த இப்படம் இயக்குநர் அகத்தியனுக்கும் 2 தேசிய விருதுகளைக் கொடுத்தது. இதற்குமுன் தமிழ் சினிமாவில் எத்தனையோ திறைமையான இயக்குநர்கள் இருந்தாலும் இயக்கத்திற்கே தேசிய விருது பெற்றனர். ஆனால் அகத்தியன் மட்டுமே சிறந்த இயக்கம், திரைக்கதை என 2 தேசிய விருதுகளைப் பெற்று காதல் கோட்டைக்கு வடிவம் கொடுத்தார்.

Published by
John

Recent Posts