பொழுதுபோக்கு

மும்பைக்கு ஒரு நியாயம்.. குஜராத்துக்கு ஒரு நியாயமா.. ஹர்திக் பாத்த வேலை.. உச்சகட்ட வெறுப்பில் ரசிகர்கள்..

லக்னோ அணி ஹைதராபாத் அணிக்கு எதிராக பரிதாபமாக போட்டியை கட்டுப்படுத்த முடியாமல் தோல்வியடைந்தது அந்த அணி மற்றும் அவர்களின் ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் மும்பை இந்தியன்ஸ் மற்றும் அவர்களின் ரசிகர்களுக்கும் கடும் வேதனையை கொடுத்துள்ளது.

லக்னோவின் தோல்வியால் அவர்களின் பிளே ஆப் இன்னும் கொஞ்சம் இருந்தாலும் மும்பை அணி முதல் அணியாக வெளியேறி உள்ளது. இனிவரும் ஒவ்வொரு போட்டிகளிலும் மீதம் இருக்கும் அணிகள் வெற்றிகளை பெற்றால் மட்டும் தான் அவர்களால் தொடர்ந்து பிளே ஆப் வாய்ப்பை தக்க வைத்துக்கொள்ள முடியும் என்ற சூழ்நிலையில் தான் மும்பை அணி 12 போட்டிகளில் நான்கில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

இதில் கடைசியாக அவர்கள் ஆடிய 5 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றிருந்ததால் பிளே ஆப் வாய்ப்பு கடினமாகி போக இன்னும் இரண்டு போட்டிகள் வெற்றி பெற்றால் கூட அவர்களால் 12 புள்ளிகளை மட்டுமே எடுக்க முடியும் என்ற நிலையும் உள்ளது. 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை வென்றிருந்த மும்பை இந்தியன்ஸ் அணி 21 மற்றும் 22 ஆகிய ஆண்டுகளில் வீக் சுற்றுடன் வெளியேறி அதிர்ச்சி அளித்திருந்தது.

கடந்த சீசனில் கூட பிளே ஆஃப் வாய்ப்பு குறைவாக இருந்த சூழலில், கடைசியில் சில போட்டிகளை தொடர்ச்சியாக வென்று மும்பை இந்தியன்ஸ் அணி முன்னேற்றம் கண்டிருந்தது. ஆனாலும் அவர்களால் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியாமல் போக, ஐபிஎல் போட்டியில் பலம் வாய்ந்த மும்பை அணி நான்காண்டுகளாக கோப்பை இல்லாமல் இருந்து வருகிறது.

அப்படி இருக்கையில் இந்த சீசனில் ஹர்திக் பாண்டியா தலைமையில் ஆடி வந்த மும்பை இந்தியன்ஸ் ஒரு அணியாக இணைந்து சிறப்பாக ஆடாமல் போனதன் காரணமாக தொடர் தோல்விகளையும் சந்திக்க நேரிட்டிருந்தது. ஒரு சில வீரர்கள் மட்டுமே தொடர்ந்து நன்றாக ஆடி வருவதால் மும்பை அணியால் தொடர்ந்து வெற்றிகளை குவிக்க முடியாமல் போனதுடன் மட்டுமில்லாமல் இந்த சீசனில் முதல் அணியாகவும் தற்போது அவர்கள் வெளியேறி உள்ளனர்.

மும்பையில் இருந்து தான் டி20 உலக கோப்பையில் நான்கு இந்திய வீரர்கள் களமிறங்க உள்ள நிலையில் அவர்களின் இந்த ஃபார்ம் பெரிய கேள்விக்குறியாகியுள்ளது. ஏற்கனவே ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி அதிக விமர்சனத்தை சந்தித்து வந்த நிலையில் தற்போது இரண்டு மூன்று ஆண்டுகளாக ஒரு கேப்டனாக அவர் செய்துள்ள விஷயம், மும்பை ரசிகர்களை வெறுப்படைய வைத்துள்ளது.

2022 மற்றும் 23 ஆகிய ஆண்டுகளில் குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா, இரண்டு முறையும் அணியை சிறப்பாக வழிநடத்தி இறுதி போட்டிக்கு அழைத்து சென்று ஒருமுறை கோப்பையையும் வென்று கொடுத்திருந்தார்.

முதல் சீசனில் கோப்பையை வென்ற அவர்கள், இரண்டாவது முறை தவறவிட, இந்த இரண்டு சீசன்களின் சிறப்பம்சமாக முதல் அணியாக குஜராத் டைட்டன்ஸ் தான் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற்றம் கண்டிருந்தது. இதனால் ஹர்திக் பாண்டியா தலைமையில் இரண்டு சீசன்களில் முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு குஜராத் முன்னேற தற்போது அதே ஹர்திக் தலைமையில், முதல் அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறி ரசிகர்களை கலங்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Published by
Ajith V

Recent Posts