இது என்ன பிச்சைக்காரன் பாட்டு மாதிரி.. தயாரிப்பு நிறுவனம் தூக்கி எறிந்த பாட்டை சூப்பர் ஹிட் ஆக்கிய ஜேம்ஸ் வசந்தன்..

கர்நாடக இசையில் பட்டம் பெற்று இசையமைப்பாளராக வேண்டும் என்ற நோக்கில் கொடைக்கானலிருந்து சென்னைக்கு வந்தவர் தான் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன். ஏராளமான கிறிஸ்தவ ஆல்பங்களுக்கு இசையமைத்த ஜேம்ஸ் வசந்தன் பிரபல நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் சன் டிவி, விஜய் டிவி, கலைஞர் டிவியில் வலம் வந்தார். இயக்குநரும், நடிகருமான சசிக்குமார் தான் படித்த பள்ளியில் ஜேம்ஸ் வசந்தனின் கிறிஸ்தவ இசைப் பாடல்களைக் கேட்டு வளர்ந்து பின் தனது முதல்படமான சுப்ரமணியபுரம் படத்திற்கு ஜேம்ஸ் வசந்தனை இசையமைக்க வைத்தார்.

சுப்ரமணியபுரம் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆக, தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க இசையமைப்பளார் ஆனார் ஜேம்ஸ் வசந்தன். தொடர்ந்து பல படங்களில் இசையமைத்தவர் ஈசன் படத்தில் வந்த ‘ஜில்லா விட்டு ஜில்லா வந்த கதையை நீயும் கேளையா..’ பாடல் ஜேம்ஸ் வசந்தனை உலகமே அறியச் செய்தது. இந்தப் பாடல் வருவதற்கு முன்பாக ஜேம்ஸ் வசந்தன் வேறொரு படத்திற்காக இந்த டியூனைப் போட்டு வைத்திருக்கிறார். அதனைக் கேட்ட தயாரிப்பாளரின் மனைவி, “என்ன இந்த டியூன் பிச்சைகாரன் பாடுற மாதிரி இருக்கு.. வேறு டியூன் போடுங்கள்” என்று ஏளனமாகப் பேசியிருக்கிறார்.

டிரஸ்ஸை மாற்றி வரச் சொன்ன பிரபல நடிகை.. பேட்டியில் கடுப்பான டிடி..

அதன்பின் இந்த டியூனை அப்படியே வைத்திருந்த ஜேம்ஸ் வசந்தன் ஒருமுறை சசிக்குமாரிடம் போட்டுக்காட்டியுள்ளார். சசிக்குமார், “சார்.. இது சூப்பரா இருக்கு.. ! யார்கிட்டயும் கொடுத்துறாதீங்க.. அடுத்த நம்ம படத்துல இந்த டியூன்ல ஒரு பாடல் பண்ணலாம்” என்று சொல்லியிருக்கிறார். அதன்பின் சசிக்குமார் மீண்டும் ஈசன் படத்தை இயக்க அதில் இந்த டியூனை வைத்து ஜில்லா விட்டு ஜில்லா வந்த.. பாடலை உருவாக்கியிருக்கிறார்கள்.

இந்தப் பாடலைப் பாடியவர் தஞ்சை செல்வி. எழுதியவர் மோகன் ராஜன். இந்தப் பாடலுக்கு நடனமாடியவர் டான்ஸ் மாஸ்டர் சுஜாதா. இந்தப் பாடல் வந்தபொழுது அந்த ஆண்டின் மிகச்சிறந்த நாட்டுப்புறப் பாடலாக விஜய் விருதுகளில் தேர்வானது. எந்தப் பாடலை பிச்சைக்காரன் பாடுவது போல் இருக்கிறது என்று நிராகரிக்கப்பட்டதோ அதே பாடலை சசிக்குமார் ஈசனுக்காகப் பெற்று சூப்பர்ஹிட் பாடலாக மாற்றினார்.

Published by
John

Recent Posts