ரஜினி படத்தில் அறிமுகம்.. ராமராஜனுடன் திருமணம்.. நடிகை நளினியின் திரையுலக பாதை..!

தமிழ் திரை உலகில் கடந்த 80களில் முன்னணி நடிகையாக இருந்தவர் நளினி. கடந்த 1984 ஆம் ஆண்டு மட்டும் அவர் 18 திரைப்படங்களில் நடித்தார், அந்த அளவுக்கு அவர் பிஸியான நடிகையாக இருந்தார் நடிகை நளினி, ரஜினிகாந்த் நடித்த ராணுவ வீரன் என்ற திரைப்படத்தில் மைதிலி என்ற ஒரு சின்ன கேரக்டரில் அறிமுகமானார்.

அதன் பிறகு அவர் விஜயகாந்த் நடித்த ஓம் சக்தி என்ற படத்திலும் ஒரு சின்ன கேரக்டரில் நடித்திருந்தாலும் அவருக்கு திரையுலகில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்த படம் என்றால் அது டி ராஜேந்தர் இயக்கி நடித்த உயிருள்ள வரை உஷா என்ற திரைப்படம் தான். இந்த படத்தில் நளினியுடன் கங்கா என்ற நடிகரும் அறிமுகமாகி இருந்தாலும் நளினி மட்டுமே திரை உலகில் பிரகாசித்தார்.

உஷா கதாபாத்திரத்தில் இந்த படத்தில் அவர் நடித்திருப்பார். மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதால் இந்த படம் சூப்பர் ஹிட் ஆனது. உயிருள்ள வரை உஷா திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அதன் பிறகு அவருக்கு திரையுலக வாய்ப்புகள் குவிந்தது.

மோகன் நடித்த சரணாலயம், மனைவி சொல்லே மந்திரம் உள்பட ஒரு சில படங்களில் நடித்த அவருக்கு மீண்டும் டி. ராஜேந்தர் இயக்கத்தில் உருவான தங்கைக்கோர் கீதம் என்ற படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் அவர் டி ராஜேந்தர் தங்கையாக நடித்திருந்தார். சிவகுமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

ரஜினியுடன் நடிக்க மறுத்து.. பின்பு ஒரு கண்டிஷன் போட்டு நடித்த முன்னணி நடிகை!

images 20

இந்த படத்தை அடுத்து அவர் நடித்த சூப்பர் ஹிட் படம் என்றால் நூறாவது நாள் என்று சொல்லலாம். மணிவண்ணன் இயக்கத்தில் விஜயகாந்த் மோகன் நடித்த இந்த படத்தில் மோகன் ஜோடியாக நளினி நடித்திருந்தார். த்ரில் கதையம்சம் கொண்ட இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இதனை அடுத்து அவர் விஜயகாந்த் மற்றும் தியாகராஜன் இணைந்து நடித்த நல்ல நாள் என்ற திரைப்படத்தில் நடித்தார். அதன் பிறகு வீட்டுக்கு ஒரு கண்ணகி, நன்றி, ஓசை, வம்ச விளக்கு போன்ற படங்களில் நடித்தார்

சிவாஜி கணேசன் உடன் நளினி நடித்த முதல் படம் வம்ச விளக்கு. இதனை அடுத்து சிவாஜி நடித்த எழுதாத சட்டங்கள், சாதனை போன்ற படங்களிலும் நடித்தார். சாதனை திரைப்படத்தில் ஒரு காட்சியில் அவர் இந்திரா காந்தி கேரக்டரில் நடித்திருப்பார்.

இதனை அடுத்து மீண்டும் த்ரில் கதையம்சம் கொண்ட 24 மணிநேரம் என்ற படத்தில் நாயகியாக நடித்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதன்பின்னர் மீண்டும் டி. ராஜேந்தர் இயக்கத்தில் உருவான உறவை காத்த கிளி என்ற படத்தில் நடித்தார். இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

வில்லன் நடிப்பு மட்டுமல்ல, தயாரிப்பாளராகவும் சாதனை செய்த சங்கிலி முருகன்..!

images 21

இந்த நிலையில் தான் மண்ணுக்கேத்த பொண்ணு என்ற திரைப்படத்தில் நளினி நடித்தார். இந்த படத்தை இயக்கியவர் நடிகர் ராமராஜன். பாண்டியன் ஹீரோவாக நடித்த இந்த படத்தில் நளினி சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பின்போது தான் ராமராஜனுடன் முதல் சந்திப்பு நடந்தது. இருவருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பின் போது காதல் ஏற்பட்டதாக கூறப்பட்டது.

இந்த படம் 1985 ஆம் ஆண்டு வெளியான நிலையில் இரண்டு வருடங்கள் திரையுலகில் உள்ளவர்களுக்கே தெரியாமல் இருவரும் காதலித்துக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் தான் திடீரென பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி 1987 ஆம் ஆண்டு நடிகர் ராமராஜனை நளினி திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன.

ஆனால் கடந்த 2000ஆம் ஆண்டு ராமராஜனுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றார். விவாகரத்து பெற்ற பின் டி ராஜேந்தர் இயக்கத்தில் சிம்பு நடித்த முதல் திரைப்படம் ஆன ’காதல் அழிவதில்லை’ என்ற படத்தில் நளினி நாயகி சார்மியின் அம்மாவாக நடித்திருந்தார். டி ராஜேந்தர் படத்தில் ஹீரோயின் ஆக அறிமுகமானவர் அவரது படத்திலேயே அம்மாவாகவும் நடித்தார்.

இதனை அடுத்து பல படங்களில் அவர் அம்மா அக்கா அண்ணி ஆகிய கேரக்டரில் நடித்த நிலையில் தான் அவருக்கு சீரியல்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சன் டிவியில் ஒளிபரப்பான கிருஷ்ணா தாசி, கோலங்கள், சின்ன பாப்பா பெரிய பாப்பா உள்ளிட்ட சீரியல் நடித்த அவர் இன்று வரை சீரியலில் பிரபலமாக இருந்து வருகிறார் என்பதும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மோதலும் காதலும் என்ற சீரியலிலும் ஜீ டிவியில் ஒளிபரப்பாகி வரும் கன்னத்தில் முத்தமிட்டால் என்ற சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

ரஜினி, சிவாஜி என முன்னணி நடிகர்களுடன் 16 படம், மலையாளத்தில் 116 படங்கள் நடித்த கீர்த்தி சுரேஷ் அம்மா.. இவ்வளவு பெரிய நடிகையா?

தமிழ் திரை உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து நடிப்பில் முத்திரை பதித்த நளினி இன்னும் திரைப்படங்களில் தனக்கேற்ற கேரக்டர் வந்தால் நடிக்க தயாராக இருப்பதாக சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...