நடிகர் திலகம் சிவாஜி உடன் போட்டி போட்ட நடிகர் சிவகுமார்! இறுதியில் வென்றது யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் நடிப்பிற்கு இலக்கணம் வகுத்த முன்னணி நடிகர்களில் தலை சிறந்த நடிகர் தான் நடிகர் திலகம் சிவாஜி. சிவாஜியின் நடிப்பிற்கு முன் மற்ற எந்த நடிகர்களாலும் போட்டி போட முடியாது. அந்த அளவிற்கு மிகவும் தத்ரூபமாகவும், எளிமையாகவும், எதார்த்தமாகவும் நடிக்கக்கூடிய ஒரே நடிகர். படங்களில் தனக்கான கதாபாத்திரத்தில் முழுமையாக தன்னை மாற்றிக் கொண்டு அதற்கேற்ற முகபாவனை, உடலமைப்பு என தன் உடல் மொழிகள் அனைத்திலும் நடிப்பை கலந்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த மிகப்பெரிய கலைஞர்தான் நடிகர் திலகம் சிவாஜி. 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பல விதமான கதாபாத்திரங்களில் ரசிகர்களின் மனதை வென்ற  கதாநாயகனாக சிவாஜி கணேசன் வாழ்ந்து வருகிறார்.

நடிகர் திலகம் சிவாஜியின் நடிப்பிற்கு இணையாக மற்றொரு கதாநாயகனை கூற வேண்டும் என்றால் அது அனைவருக்கும் சற்று கடினமான கேள்வியாக தான் அமைந்திருக்கும். ஆனால் சிவாஜியின் ரசிகரான நடிகர்  சிவகுமார்  நடிகர் சிவாஜி உடன் போட்டி போட்டு உள்ளார் என்று கூறினால் நம்மால் நம்ப முடியாத தகவலாக அமைந்துள்ளது. இது குறித்து முழு செய்தியும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

நடிகர் சிவகுமார் நடிகர் திலகம் சிவாஜியின் படங்களை பார்த்து நடிப்பின் மீது ஆர்வம் கொண்டு திரை உலகில் காலடி எடுத்து வைத்த ரசிகர்களில் ஒருவர். 1965 ஆம் ஆண்டு காக்கும் கரங்கள் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகம்  ஆனார். அதைத்தொடர்ந்து எம்ஜிஆர்,  ஜெமினி கணேசன்  என பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து 190 திரைப்படங்களுக்கு மேல் நடிகர் சிவக்குமார் நடித்துள்ளார். அப்படி இருக்கும் பொழுது நடிகர் திலகம் சிவாஜி உடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பும், அவருடன் சகஜமாக பழகும் வாய்ப்பு நடிகர் சிவகுமாருக்கு பல படங்களில் கிடைத்துள்ளது. 

சரஸ்வதி சபதம்,  கந்தன் கருணை,  திருமால் பெருமை,  உயர்ந்த மனிதன் போன்ற சரித்திர  திரைப்படங்களில் நடிகர் திலகம் சிவாஜி உடன் இணைந்து நடிகர் சிவகுமார் சிறப்பாக நடித்துள்ளார்.  அந்த காலத்தில் நடிகர் சிவாஜியை போல நடிப்பிற்காக அதிகம்  முக்கியத்துவம் கொடுக்கும் நடிகர்களில் ஒருவராக நடிகர் சிவகுமார் வலம் வந்துள்ளார்.  அந்த நேரத்தில் தான் நடிகர் சிவகுமார் மற்றும்  நடிகர் சிவாஜி இணைந்து நடித்த திரைப்படம் ராஜராஜ சோழன். ஏ.பி நாகராஜன் இயக்கத்தில் 1973 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன், விஜயகுமாரி நடிப்பில் இந்த திரைப்படம் வெளியாகியிருந்தது. 

லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு ஆப்பு வைத்த ரசிகர்கள்! ராசி இல்லாத நடிகையாக மாறும் நயன்தாரா!

 இந்த படத்தில் நடிகர் சிவக்குமார் சிவாஜியின் மகனாக நடித்திருப்பார். ராஜராஜ சோழன் திரைப்படம் ஒரு சரித்திர திரைப்படம் என்பதால் ஏழு மணி படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பாகவே நடிகர் திலகம் சிவாஜி படப்பிடிப்பு தளத்திற்கு வந்து தனக்கான ஒப்பனைகளை செய்து கொள்ள வேண்டும்.  அதாவது 6.30 முதல் 7 மணிக்கு முன்பாகவே படப்பிடிப்பு தளத்திற்கு வந்து தனது மேய்க்கப்பை சரி செய்து ஆபரணங்களை அணிந்து கொள்வது சிவாஜியின் வழக்கம்.  அப்படி ஒரு நாள் படப்பிடிப்பிற்கு வரும் பொழுது மேக்கப் செய்வதற்காக தனது அறைக்கு சென்றிருந்தார். அப்போது சிவாஜிக்கு முன்பாகவே 5 மணிக்கு எல்லாம் நடிகர் சிவகுமார்  படப்பிடிப்பு தளத்திற்கு வந்து தனக்கான ஒப்பனைகளை செய்து கொண்டு  6:00 மணி அளவில் தயாராக இருந்துள்ளார்.

 இதை பார்த்து நடிகர் சிவாஜி நான் காரில் வந்தேன் நீ என்னப்பா பறந்து வந்தாயா என  சிரிக்கும்படி கேள்வி கேட்டுள்ளார்.  அதற்கு நடிகர்  சிவக்குமார் உங்களுடன் நடிப்பில் என்னால் போட்டி போட முடியாது, என்னால் மட்டுமல்ல எந்த ஒரு நடிகராலும் போட்டி போட முடியாது.  அதனால் தான் மேக்கப் போடுவதிலாவது போட்டி போடலாம் என நினைத்து உங்களுக்கு முன்னால் வந்து ஒப்பனைகள் செய்து கொண்டேன் என  பதில் கூறினார்.  இதை கேட்டதும் சிவாஜி உடனே சிரிக்க துவங்கி உன் ஆர்வத்தை நான் புரிந்து கொள்கிறேன் என அவரின் தொழில் பக்தியை பாராட்டினார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.