லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு ஆப்பு வைத்த ரசிகர்கள்! ராசி இல்லாத நடிகையாக மாறும் நயன்தாரா!

தமிழ் சினிமாவில் 2005 ஆம் ஆண்டு வெளிய ஐயா திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை நயன்தாரா. இந்த படத்தில் பள்ளி மாணவியாக நடித்திருக்கும் நயன்தாரா மக்களின் மனதில் நீங்காத இடத்தை பிடிக்க தொடங்கினார். நடிகர் சரத்குமார் இருக்கு ஜோடியாக இந்த படத்தில் இயல்பான நடிப்பை நயன்தாரா வெளிக்காட்டி இருப்பார். இந்த படத்திற்கு கிடைத்த நல்ல விமர்சனங்களை தொடர்ந்து நடிகை நயன்தாரா சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து சந்திரமுகி திரைப்படத்தில் நடித்திருப்பார்.

அதைத்தொடர்ந்து தளபதி விஜய் உடன் சிவகாசி திரைப்படத்தில் மாசாக ஒரு குத்துப் பாடலுக்கு நடனம் ஆடி இருப்பார். அதைத் தொடர்ந்து சூர்யாவின் கஜினி திரைப்படத்திலும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பார்.

அதை அடுத்து 2006 ஆம் ஆண்டு சிம்புவுடன் இணைந்து நடித்த வல்லவன் திரைப்படம் நடிகை நயன்தாராவிற்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இந்த படத்தில் நடித்துக் கொண்டிருந்த பொழுது நடிகர் சிம்புவிற்கும் நயன்தாராவிற்கும் இடையே காதல் மலர்ந்ததாக பெருமளவில் பேசப்பட்டது. ஆனால் அந்த காதல் பிரிவில் முடிய நயன்தாரா மீது சில எதிர்மறையான விமர்சனங்கள் வரத் துவங்கியது. அந்த நேரத்தில் தல அஜித்துடன் இணைந்து நடிகை நயன்தாரா பில்லா திரைப்படத்தில் நடித்திருப்பார். 2007 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில் நடிகை நயன்தாராவின் தோற்றம் மிகச் சிறப்பாக அமைந்திருக்கும். இந்த படத்தில் கிடைத்த மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து யாரடி நீ மோகினி, குசேலன், ஏகன், வில்லு, ஆதவன் என அடுத்தடுத்து பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நயன்தாரா பல வெற்றி படங்களை கொடுத்து வந்தார்.

அதே நேரத்தில் நடிகை நயன்தாரா தமிழ் ரசிகர்களின் மனதை வென்ற நடிகை ஆகவும் வலம் வரத் தொடங்கினார். அதிலிருந்து நடிகை நயன்தாராவிற்கு லேடி சூப்பர் ஸ்டார் என பட்டமும் ரசிகர்களால் வழங்கப்பட்டு வந்தது. அதன் பின் ஹீரோயின் ஆக மட்டுமில்லாமல் தன் ரசிகர்களை மேலும் மகிழ்விக்கும் விதத்தில் பெண்கள் முக்கியத்துவம் கொண்ட கதாபாத்திர கதைகளில் நயன்தாரா நடிக்க தொடங்கினார். அந்த வகையில் நயன்தாரா நடிப்பில் வெளியான மாயா, கோலமாவு கோகிலா, அறம் போன்ற திரைப்படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் வெற்றியை பெற்றுக் கொடுத்தது. இதன் மூலம் நயன்தாரா மீண்டும் மீண்டும் வெற்றிப் படிக்கட்டில் முதலிடத்தில் இருந்தார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளியான சில  திரைப்படங்கள் நயன்தாராவிற்கு சுமாரான வெற்றியை ஏற்படுத்திக் கொடுத்தது. அதன்பின் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான காத்து வாக்குல இரண்டு காதல் நல்ல விமர்சனங்களை பெற்ற நிலையில் அதை தொடர்ந்து வெளியான o2 திரைப்படம் சுமாரான வெற்றியை பெற்றது. இந்த நிலையில் தற்பொழுது மீண்டும் தொடர்ந்துள்ளது. அதாவது நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியான அன்னபூரணி திரைப்படம் மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்துள்ளது.

அறிமுக இயக்குனர் தினேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் டிசம்பர் ஒன்றாம் தேதி வெளியான இந்த திரைப்படம் நயன்தாராவிற்கு மிகப்பெரிய தோல்வியை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. விமர்சன ரீதியாக இந்த படம் மக்கள் மனதை கவரவில்லை. இந்நிலையில் அன்னபூரணி திரைப்படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது அன்னபூரணி திரைப்படம் தமிழ்நாடு அளவில் வெறும் 85 லட்சம் மட்டுமே என உறுதியான தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இந்தப் படத்திற்கு நயன்தாரா வாங்கிய சம்பளம் மட்டும் 10 கோடியாக உள்ளது. படத்தின் வசூலை விட நயன்தாராவின் சம்பளம் அதிகமாக இருப்பது தற்பொழுது சினிமா வட்டாரங்களின் பேசும் பொருளாக மாறி உள்ளது.

சம்பவம் செய்த கமல்! தக் லைஃப் படத்தில் இப்படி ஒரு ரணகளமா?

மேலும் சமீபத்தில் அன்னபூரணி திரைப்படத்தின் ப்ரோமோஷன் விழாவில் தன்னை லேடிஸ் சூப்பர் ஸ்டார் என அழைக்க வேண்டாம் என நயன்தாரா அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளரிடம் கூறியிருந்தார். மேலும் அதற்கான விளக்கமும் கொடுத்திருந்தார். அதன்படியே அன்னபூரணி திரைப்படமும் ரசிகர்களின் மனதை கவராமல் தோல்வியை தழுவியது. இதிலிருந்து லேடிஸ் சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு நடிகை நயன்தாரா தகுதி இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.