முதலில் பெரியார் சீடன்.. பின்னர் இஸ்லாம் மதத்திற்கு மாற்றம்.. வீரம் படத்தில் கவனம் ஈர்த்த நடிகரின் மறுபக்கம்..

கடந்த 1994 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் உருவான ‘கருத்தம்மா’ என்ற திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானவர் பெரியார் தாசன். சிசுக்கொலை குறித்த கதை அம்சம் கொண்ட இந்த படத்தில் மொக்கையன் என்ற கேரக்டரில் நடித்தார். அந்த கேரக்டர் அவருக்கு மிகப்பெரிய புகழை பெற்றுக் கொடுத்தது.

இதனை அடுத்து விஜயகாந்த் நடித்த தமிழ்ச்செல்வன் என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்தார். ‘ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே’ ‘மாப்பிள்ளை மனசு பூப்போல’  ‘காதலர் தினம்’ ‘ஆனந்தம்’ ‘அழகி’ ‘ஐயா’ ‘ஒரு கல்லூரியின் காதல்’ உள்பட பல திரைப்படங்களில் அவர் அப்பா மற்றும் முக்கிய இடங்களில் நடித்தார்.

மேலும் வசந்தம் என்ற தொலைக்காட்சி சீரியலில் நடித்த அவர்  ‘தமிழ் படம்’  என்ற திரைப்படத்தில்  நடித்தார்.  இந்த நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு புற்றுநோய்க்கு காரணமாக அவர் காலமானார். அவரது மறைவுக்கு பின்னர் அவர் அஜித்துடன் நடித்த ‘வீரம்’ என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது. வீரம் படத்தில் நடிகர் அஜித் குமார் டீக்கடையில் நின்ற படி பெரியார் தாசன் பேசும் காட்சி மிகவும் எமோஷனலான ஒன்று ஆகும்.

periyar dasan1

கல்லூரியில் படித்த போது பெரியாரின் சீடனாக இருந்து வந்துள்ளார். அதன் பின்னர் திடீரென புத்த மதத்திற்கு மாறினார். பின்னர் சில ஆண்டுகள் கழித்து அவர் இஸ்லாம் மதத்திற்கு மாறி உள்ளார். பெரியார் தாசனின் இயற்பெயர் சேஷாச்சலம். இவர் சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்தவர். சிறு வயதிலேயே இவர் பெரியாரின் கொள்கைகளை கடைபிடிக்க தொடங்கினார். பச்சையப்பா கல்லூரியில் அவர் படித்துக் கொண்டிருந்த போது தன்னுடைய பெயரை பெரியார் தாசன் என்று மாற்றிக் கொண்டார்

தமிழ் இலக்கியம் மற்றும் ஆங்கிலத்தில் புலமை பெற்ற இவர் சுமார் 120 புத்தகங்கள் வரை எழுதியுள்ளார். அதே போல பல புத்தகங்களையும் இவர் மொழிபெயர்ப்பு செய்துள்ளார். தான் படித்த பச்சையப்பன் கல்லூரியில் அவர் பேராசிரியராகவும் பணிபுரிந்தார்.  இந்த நிலையில் கடந்த 1990 ஆம் ஆண்டு திடீரென அவர் புத்த மதத்திற்கு மாறினார். அம்பேத்கரின் சில நூல்களை அவர் தமிழில் மொழி பெயர்த்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தான் திடீரென 2010 ஆம் ஆண்டு அவர் இஸ்லாம் மதத்துக்கு மாறினார். அதன் பின்னர் அவர் மெக்காவிற்கு சென்று வந்ததுடன் தன்னுடைய பெயரையும் அப்துல்லா என்று மாற்றிக் கொண்டார். தனது மனைவியின் பெயரையும் அவர் பாத்திமா என்று மாற்றிக் கொண்டார்.

periyar dasan

பெரியார்தாசன் தான் உயிருடன் இருக்கும் போது தான் இறந்த பிறகு தன்னுடைய உடல் பலருக்கும் பயன்பட வேண்டும் என்பதற்காக அவர்  மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ்  இடம் தன்னுடைய உடலை ஒப்படைக்கும்படி எழுதி வைத்திருந்தார். இதனை அடுத்து அவரது மறைவுக்கு பிறகு அவரது உடல் மெட்ராஸ் மெடிக்கல் காலேஜில் ஒப்படைக்கப்பட்டது. உடனடியாக அவருடைய கண்கள் சங்கரா நேத்ராலயாவிற்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு சில திரைப்படங்களில் மட்டும் நடித்தாலும் முக்கியமான கேரக்டர்களில் ரசிகர்களை கவரும் வகையில் நடித்தவர் பெரியார்தாசன். அதே நேரத்தில் அவருடைய புத்தகங்கள் வாசகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews