கேலி கிண்டல் முதல் டாக்டர் பட்டம் வரை.. நடிகர் கிங்காங் தன்னம்பிக்கை வாழ்க்கை..!

நடிகர் கிங் காங் உயரம் குறைந்தவர் என்பதால் அவரை அவருடைய நண்பர்கள் உறவினர்களே கேலி செய்தனர். ஏன் அவருடைய பெற்ற தந்தையே கேலியும் கிண்டலும் செய்ததாகவும் கூறப்படுகிறது. அவ்வாறு உடல் குறையால் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளான நடிகர் கிங்காங், தன்னம்பிக்கையுடன் முயன்று ஜனாதிபதியிடம் தேசிய விருது பெரும் வகையில் சாதனை செய்துள்ளார்.

திருவண்ணாமலை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் தான் கிங்காங். இவரது இயற்பெயர் சங்கர். சிறுவயதிலேயே இவரது குறையை பெற்றோர்கள் கண்டுபிடித்த நிலையில் அந்த குறை தெரியாமல் வளர்க்க வேண்டும் என்று முடிவு செய்தனர். ஐந்தாம் வகுப்பு மட்டுமே படித்த கிங்காங், குடும்ப வறுமை காரணமாக விவசாய வேலை செய்தார்.

3 மனைவிகள், 7 குழந்தைகள்.. ரீமேக் உரிமை கொடுக்க மறுத்த ஸ்ரீதர்.. நடிகர் டிஎஸ் பாலையாவின் அறியப்படாத பக்கம்..!

kingkong3

வேலை செய்யும் இடத்திலும் சரி, நண்பர்களிடத்திலும் சரி, உறவினர்கள் இடத்திலும் சரி, அவரது குறைவான உருவத்தால் கேலியும், கிண்டலும் செய்யப்பட்டார். ஒரு கட்டத்தில் அவருடைய தந்தையே அவருடைய குறையை சுட்டிக்காட்டி திட்டியதுதான் அவருக்கு மிகப்பெரிய வருத்தமாக இருந்தது.

இருப்பினும் அவர் தன்னம்பிக்கையுடன் இருந்தார். இந்த நிலையில் கிராமத்தில் ஓரங்க நாடகங்களில் பபூன் வேடத்தில் நடித்தார். ஒரு நாள் நடித்தால் அவருக்கு சம்பளம் ஐந்து ரூபாய் கொடுக்கப்படும். அவரது நடிப்பை பார்த்த சிலர் உனக்கு நன்றாக நடிப்பு வருகிறது, நீ சென்னை சென்று சினிமாவில் வாய்ப்பு கேட்டு பார் என்று கூறியதை அடுத்து 1986 ஆம் ஆண்டு சென்னைக்கு வந்தார்.

தனது அக்கா வீட்டில் தங்கி கொண்டு சினிமா வாய்ப்பு தேடினார். வாய்ப்பு தேடிச் சென்ற இடத்தில் எல்லாம் அவருக்கு அவமானம் தான் கிடைத்தது. ஆனாலும் அவர் தன்னம்பிக்கையுடன் சினிமாவில் வாய்ப்பு தேடினார். அவரது முயற்சி ஒரு கட்டத்தில் பலித்தது.

1988 ஆம் ஆண்டு கலைக்குழு ஜி சேகரன் இயக்கத்தில் பாண்டியராஜன் நடிப்பில் உருவான ஊரை தெரிஞ்சுகிட்டேன் என்ற படத்தில் தான் நடிகராக அறிமுகமானார். முதல் படத்திலேயே அவருக்கு ரசிகர்களை கவரும் கேரக்டருக்கு கிடைத்ததால் அவருக்கு அடுத்தடுத்து படங்கள் வாய்ப்பு கிடைத்தது.

சிவாஜியை வைத்து எடுத்த ஒரே படம்.. இனிமேல் பெரிய நடிகர்களே வேண்டாம் என முடிவு செய்த கே.பாலசந்தர்..!

kingkong1

இந்த நிலையில் ரஜினியுடன் அதிசய பிறவி என்ற படத்தில் நடித்தார். ரஜினிக்கு குருவாக நடித்த அவரது நடிப்பை ரசிகர்கள் ரசித்தார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது ரஜினிக்கும் அவருக்கும் ஒரு நெருக்கமான நட்பும் உண்டானது.

ரஜினியை அடுத்து கமல்ஹாசனின் மகராசன் என்ற படத்திலும், சில ஹிந்தி படங்களிலும் நடித்தார். விஜய்யுடன் போக்கிரி, சுறா போன்ற படங்களில் நடித்த அவருக்கு வடிவேலு மிகப்பெரிய அளவில் உதவி செய்தார். தன்னுடைய படத்தில் அவருக்கு பொருத்தமான வேடம் கிடைத்தால் உடனடியாக கிங் காங்கை நடிக்க வையுங்கள் என இயக்குனருக்கு பரிந்துரை செய்வார்.

ஒரு கட்டத்தில் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என பிசியான நடிகராக மாறினார். இதனை அடுத்து வருமானம் அதிகரித்ததை அடுத்து அவர் சென்னை எம்ஜிஆர் நகரில் சொந்த வீடு வாங்கினார். அவருக்கு திருமணம் செய்து பார்க்க வேண்டும் என்று அவரது அம்மாவுக்கு ஆசையாக இருந்தது. ஆனால் அவர் பெண் கேட்டு செல்லும் இடங்களில் எல்லாம் அவரது குறைந்த உயரம் மற்றும் பார்வை கோளாறு ஆகிவை காரணமாக பெண்கள் பலர் அவரை நிராகரித்தினார்.

இந்த நிலையில் தான் அவருடைய சொந்தக்கார பெண் ஒருவர் அவரை விரும்பி திருமணம் செய்ய வந்தார். மிகவும் தயக்கத்துடன் அவரை கிங் காங் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். சென்னை எம்ஜிஆர் நகரில் இன்றும் அவர் தனது குடும்பத்துடன் சொந்த வீட்டில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். நடிகர் கிங்காங் தற்போது பெஸ்ட் டான்ஸ் என்ற டான்ஸ் குரூப் நடத்தி வருகிறார்.

விஜய்யின் கல்லூரி காலத்தில் அப்படி ஒரு காதலா? மலரும் நினைவுகளை பகிர்ந்த காமெடி நடிகர்!

இந்த குரூப்பின் மூலம் வெளிநாடுகளில் கலை நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். கிங் காங் தமிழக கவர்னர் மற்றும் இந்திய ஜனாதிபதியிடம் விருது வாங்கி உள்ளார். வேலூர் பல்கலைக்கழகம் அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் கொடுத்தது. உயரம் காரணமாக கேலிக்கும், கிண்டலுக்கும் உள்ளான கிங்காங், பின்னர் தனது குறையையே பிளஸ் ஆக மாற்றி தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார். அவருடைய தன்னம்பிக்கை பலருக்கும் ஒரு பாடமாக இருக்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...