கவின்- ஹரிஷ் கல்யாண் அடுத்த விஜய்- அஜீத் ஆக வரப்போகிறார்களா…? விவாதிக்கும் நெட்டிசன்கள்…

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்ற நடிகர்களுள் ஒருவர் தான் நடிகர் கவின். விஜய் டிவியின் பிரபல தொடர்களான ‘கனா காணும் காலங்கள்’, ‘சரவணன் மீனாட்சி’ போன்ற தொடர்களில் நடித்து பிரபலமானவர்.

அதைத் தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 3 இல் போட்டியாளராக கலந்துக் கொண்டு இறுதி வரை சென்றார். அதன் பின்பு ‘லிப்ட்’, ‘டாடா’ ஆகிய திரைப்படங்களில் நடித்து அனைவரின் கவனத்தை ஈர்த்தார். தற்போது கவின் நடிப்பில் ‘ஸ்டார்’ திரைப்படம் வெளியாகி பட்டையை கிளப்பி கொண்டிருக்கிறது.

அதே போல், நடிகர் ஹரிஷ் கல்யாண் ‘சிந்து சமவெளி’ திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பிக் பாஸ் சீசன் 1 இல் வைல்ட்கார்ட் போட்டியாளராக கலந்துக் கொண்டதன் வாயிலாக பிரபலமானவர். அதைத் தொடர்ந்து ‘பியார் பிரேம காதல்’, ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ ‘தாராள பிரபு’, ‘ஓ மன பெண்ணே’ போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான ‘பார்க்கிங்’ திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. அந்த திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாணின் நடிப்பு பாராட்டுக்குரியதாக இருந்தது. இந்நிலையில் தற்போது கவினின் ‘ஸ்டார்’ திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது ஹரிஷ் கல்யாண் தானாம். ‘பார்க்கிங்’ திரைப்படத்தில் நடித்து கொண்டிருந்ததால் ‘ஸ்டார்’ திரைப்படத்தில் நடிக்க முடியவில்லையாம்.

ஹரிஷ் கல்யாணின் ‘பார்க்கிங்’ திரைப்படமும், கவினின் ‘ஸ்டார்’ திரைப்படமும் நல்ல விமர்சனங்கள் பெற்றதால், நெட்டிசன்கள் விவாதத்தில் இறங்கியுள்ளனர். இந்த இரண்டு நடிகைகளையும் ஒப்பிட்டு பேசி வருகின்றனர். இந்த சூழல் ஆரம்பத்தில் விஜய்- அஜீத் நடித்த காலகட்டத்தில் நடந்தது போல் இருப்பதால் கவின்- ஹரிஷ் கல்யாண் அடுத்த தலைமுறைக்கான விஜய்- அஜீத் ஆக வருவார்களா என்ற விவாதமும் இணையத்தில் நடந்து கொண்டிருக்கிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...