பாக்யராஜ் கண்டெடுத்த முத்து… நடிப்பில் முத்திரை பதித்த கல்லாப்பெட்டி சிங்காரம்…!!

தமிழ் சினிமாவில் ஒரு சில நகைச்சுவை நடிகர்கள் மறக்க முடியாத அளவில் தங்கள் முத்திரையை பதித்து சென்றிருப்பார்கள். அவர்களில் ஒருவர் தான் கல்லாப்பெட்டி சிங்காரம். பாக்யராஜ் கண்டெடுத்த சிங்காரம் என்றே இவரை கூறுவார்கள். கல்லாப்பெட்டி சிங்காரம் கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்தவர்.

சிறுவயதிலிருந்தே ஊரில் நடத்தப்படும் நாடகங்களை பார்த்து வளர்த்த அவர் படிப்பின் மீது நாட்டம் இல்லை என்றாலும் நாடகக்கலை மீது மிகுந்த நாட்டம் கொண்டிருந்தார். நாடகங்களில் நடித்து திரைப்படத்தில் புகழ் பெற வேண்டும் என்பதுதான் சிறுவயதிலேயே அவரது கனவாக இருந்தது. சின்ன சிறு வயதிலேயே அவர் சின்ன சின்ன கேரக்டர்களில் நாடகங்களில் நடித்தார்.

சிவாஜி நடித்த கவரிமான்… கதாநாயகிக்கு டூப் வைத்து எடுத்த இயக்குனர்.. திரையில் பார்த்து அசந்து போன படக்குழு..!

kallapetti singaram1

நாடகத்தில் நடித்துக் கொண்டே சினிமாவில் நடிக்கவும் அவர் முயற்சி செய்து கொண்டிருந்தார். அவருடைய முயற்சி ஒரு கட்டத்தில் பலித்தது. கடந்த 1966 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் நடித்த மோட்டார் சுந்தரம் பிள்ளை என்ற திரைப்படத்தில் அவர் காமெடி நடிகராக அறிமுகமானார்.

முதல் படத்தில் அவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் அதன் பிறகு அவருக்கு அடுத்தடுத்து சில வாய்ப்புகள் கிடைத்தது. எம்ஜிஆர் நடித்த காவல்காரன், சிவாஜி நடித்த சொர்க்கம், கமல்ஹாசன் நடித்த குமார விஜயன் ஆகிய படங்களில் நடித்தார். இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது பாக்யராஜ் நடித்த சுவரில்லா சித்திரங்கள் என்ற படம் தான். இந்த படத்தில் அவர் கவுண்டர் என்ற கேரக்டரில் கலக்கி இருப்பார்.

அதே போல் பாக்கியராஜின் அடுத்தடுத்த படங்களில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஒருகை ஓசை, பாபா ருக்மணி, மௌன கீதங்கள், அந்த ஏழு நாட்கள், இன்று போய் நாளை வா, டார்லிங் டார்லிங் டார்லிங் உள்பட பல பாக்யராஜ் படங்களில் அவருக்கு முத்தான கேரக்டர்கள் கிடைத்தது. அந்த கேரக்டர்களை அவர் சரியாக பயன்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

20 வயதில் ரூ.400ஐ பாக்கெட் மணியாக பெற்ற நடிகர்…! ரூ.1 கோடி சம்பளம் வாங்கிய முதல் நடிகர்..! யார் யார்..?!

kallapetti singaram

திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் அவர் சொந்தமாகவே நாடகங்கள் எழுதி அதில் கதாநாயகனாகவும் நடித்தார். திரைப்படங்களில் நாயகனாக நடிக்க முடியாத ஆசையை அவர் நாடகங்களில் பூர்த்தி செய்து கொண்டார் என்று கூறலாம். பாக்யராஜ் மட்டுமின்றி வேறு சில இயக்குனர்களும் கல்லாப்பெட்டி சிங்காரத்தை தங்கள் படங்களில் பயன்படுத்திக் கொண்டனர்.

குறிப்பாக காக்கி சட்டை திரைப்படத்தில் கமல்ஹாசனின் அப்பாவாக நடித்தார். அதேபோல் உதய கீதம் திரைப்படத்தில் கவுண்டமணி அப்பாவாகவும் நடித்து தனது முத்திரையை பதிவு செய்தார். ராஜ மரியாதை, சொல்வதெல்லாம் உண்மை, மக்கள் என் பக்கம், வீரபாண்டியன், எங்க ஊரு பாட்டுக்காரன் உள்பட பல திரைப்படங்களில் அவர் நடித்தார்.

இந்த நிலையில் திடீரென அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. அதனால் அவர் படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டு தனது உடல் நலனை கவனிக்க தொடங்கினார். ஆனாலும் அவரது உடல்நிலை நாளுக்கு நாள் மோசமானதால் கடந்த 1990-ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் தேதி அவர் காலமானார். அவர் நடித்த கடைசி திரைப்படம் கிழக்கு வாசல். இந்த படம் அவரது மறைவுக்கு பின் வெளியானது.

காமெடி நடிகர் ரமேஷ் கண்ணா திரைப்படம் இயக்கியுள்ளாரா? அதுவும் அஜித் படமா?

கார்த்தி, ரேவதி நடித்த இந்த படத்தின் டைட்டிலில் அமரர் கல்லாப்பெட்டி சிங்காரம் போட்டு அவருக்கு பட குழுவினர் மரியாதை செலுத்தி இருப்பார்கள். கல்லாப்பெட்டி சிங்காரம் ஒரு அற்புதமான நடிகர் என்றும் அவரை தமிழ் சினிமா அதிகம் பயன்படுத்தவில்லை என்றும் அவரது மறைவுக்கு பின் பாக்யராஜ் பேட்டி அளித்திருந்தார். அது முற்றிலும் உண்மையே. அவரது திறமைக்கேற்ற கேரக்டரை அவருக்கு பாக்யராஜ் தவிர வேறு இயக்குனர்கள் கொடுக்கவில்லை என்பது தான் கசப்பான உண்மை.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...