ஆன்மீகம்

இன்று மகாபரணி… எமதர்மராஜாவிடம் இதைக் கேட்க மறந்துடாதீங்க!

மகாளயபட்சகாலத்தில் எறும்புக்காவது ஒரு கைபிடி அரிசி போட்டா, அதுவே மிகப்பெரிய தானமாக எடுத்துக்கொள்ளப்படும். அதனால எனக்கு வசதி இல்லை. நான் எப்படி அன்னதானம் எல்லாம் கொடுக்குறதுன்னு நினைக்காதீங்க.

மகாளயபட்சகால விரதத்தை யாரெல்லாம் கடைபிடிப்பது? அப்பா, அம்மா இல்லாத ஆண்கள். அப்பா இருக்காங்க. அம்மா இல்லேன்னாலும் இந்த காலத்தில் திதி கொடுக்கலாம். அப்பா, அம்மாவுக்கு திதி கொடுப்பார். ஆனாலும் ஒரு மகனாக அந்தக் கடமையை நீங்க செய்யலாம். மனைவி இல்லாத கணவன்மார்கள் கண்டிப்பா செய்யணும்.

அப்பா, அம்மா இருக்காங்க. ஆனா எனக்கு ஒரு குழந்தை இருந்து அது தவறிப்போச்சு. ஆனா அந்தக் குழந்தைக்காக இந்த விரதத்தை தாராளமாக இருக்கலாம். கணவர் இல்லாதவங்க தாராளமாக எள்ளும், தண்ணீரும் இறைத்து திதி கொடுக்கலாம். உபவாசம் இருக்கலாம். கணவன் உள்ளவர்கள் எள்ளும், தண்ணீரும் இறைக்க முடியாது. உபவாசம் செய்ய முடியாது. விளக்கேற்றலாம். அன்னதானம் செய்யலாம். மதியம் இலை போட்டு படைக்கலாம். இது எல்லா பெண்களும் செய்ய வேண்டிய விஷயம்.

இந்த மகாளயபட்ச காலத்தில் மகாபரணி ரொம்ப முக்கியமான காலம். அது இன்றுதான் (29.6.2026) வருகிறது. இந்த 5 விஷயத்தையும் கண்டிப்பாக இன்று கடைபிடிங்க. இன்று காலை 11.25மணி முதல் பரணி நட்சத்திரம் ஆரம்பிக்கிறது. இதை காருண்ய தர்ப்பணம்னு சொல்றோம். உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் சேர்த்து மாலை விளக்கேற்றுங்க. இன்று எமதர்மராஜாவிடம் பிரார்த்தனை பண்ணுங்க. இதுக்கு முன்னால போன ஆத்மாக்கு எல்லாம் நல்ல வழியைக் காட்டு.

எங்க குடும்பத்துல பரம்பரையில வர்ற எல்லாருக்கும் நல்ல மரணங்களாகக் கொடுன்னு பிரார்த்தனை பண்ணுங்க. வீட்டுல ஏதாவது துர்மரணங்கள் ஏற்பட்டு இருந்தா இந்த நாள்ல விசேஷமா அவங்களை நினைச்சு அவங்களுக்குப் படையல் போட்டுட்டு தானம் செய்வது நல்ல பலன் தரும். பௌர்ணமி அன்று இறந்தவர்களுக்கு அமாவாசை அன்று திதி கொடுக்க வேண்டும்.

அவர்களுக்கு இந்த 14 நாள்கள் வழிபாடு சேராது. முன்னோர்களின் ஆசி நமக்கு இருந்தாலே போதும். வாழ்க்கை ரொம்ப சந்தோஷமா இருக்கும். மேற்கண்ட தகவலை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேசமங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.

Sankaran V
Sankar Velu

பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.