ஆன்மீகம்

விநாயகர் சதுர்த்திக்கு பிள்ளையாரை எப்போ வாங்கணும்? பூஜைக்கான நேரம் என்ன?

எந்த வழிபாடு செய்தாலும் அதுல முதல் இடம் பிடிக்கக்கூடிய விநாயகப்பெருமானுக்கு வருடத்தில் ஒருநாள் கொண்டாடக்கூடிய விழா விநாயக சதுர்த்தி. இங்கு கோவிலில் கொடியேற்றி வழிபாடு செய்வர். சாதாரணமாக தெருக்கோவில்ல ஒரு சின்ன பிள்ளையாராக இருந்தாலும் அவரைக் கொண்டாடி மகிழக்கூடிய ஆனந்த திருவிழா தான் இது.

வடமாநிலங்களில் இது மிகவும் பிரசித்திப் பெற்றது. தென்மாநிலத்திலும் மிகவும் பிரசித்திப் பெற்றது. எல்லா நாட்டுலயும் சிறப்பா இருக்கு. அவர் ரொம்ப ரொம்ப எளிமையானவர். அருகம்புல் ஒன்றே எனக்குப் போதும். மலர்களிலேயே புறக்கணிக்கப்பட்ட எருக்கமலரை ஏற்கிறார். சாணி, சந்தனம், மஞ்சள், களிமண் என எதில் பிடித்து வைத்தாலும் அதில் நான் இருப்பேன் என்று எளிமையாக இருக்கிறார் பிள்ளையார்.

வருடத்தில் ஒருமுறையாவது களிமண்ணில் செய்த பிள்ளையாரை வாங்குங்க. வருடத்திற்கு ஒருமுறை தான் அவர்களுக்கு இதை வைத்து வருமானம் வருகிறது. அந்த வகையில் பிள்ளையாரை வாங்குவது எப்போன்னு பார்ப்போம்.

14.9.2026 அன்று காலை 8.41 மணி முதல்15.9.2026 அன்று காலை 9.22 மணி வரை சதுர்த்தி உள்ளது. அதனால இந்த ஆண்டு 14ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. பிள்ளையாரை ஞாயிற்றுக்கிழமை வாங்குபவர்களுக்கான நேரம் இதுதான். 13.9.2026 அன்று மாலை 3.10மணி முதல் 4.20 மணி வரையும், மாலை 6 மணிக்கு மேலும் விநாயகர் சிலையை வாங்கலாம்.

பிள்ளையாரை திங்கள்கிழமை வாங்குவதாக இருந்தால் அன்று காலை 9.10 மணி முதல் 10.20மணிக்குள் வாங்கலாம். வழிபாடு செய்யும் நேரம் இதுதான். 14.9.2026 திங்கள்கிழமை அன்று காலை 9.10மணி முதல் 10.20மணி, மதியம் 1மணி முதல் 2 மணி வரை, மாலை 6 மணி முதல் 8 மணி வரையும் வழிபடலாம். எத்தனை நாள் வீட்டுல பிள்ளையாரை வைக்கப்போறீங்கன்னு கணக்குப் பார்த்து ஞாயிற்றுக்கிழமை பிள்ளையாரை வாங்கலாம்.

3 நாள் வைப்பது பொதுவான ஒரு கணக்கு. ஞாயிறன்று பிள்ளையாரை வாங்கினால் 3வது நாள் கரைக்கணும். அது செவ்வாய்க்கிழமை. கரைக்க உசிதமான நாள் அல்ல. புதன்கிழமையும் வீட்ல வைக்கணும். 5வது நாள் வியாழக்கிழமைதான் கரைக்க முடியும். 5நாள் வீட்ல வைக்க முடியாதவர்கள் விநாயகர் சதுர்த்தி அன்று வீட்ல வைத்து பூஜை செய்து கொள்ளலாம். மேற்கண்ட தகவலை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேசமங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.

Sankaran V
Sankar Velu

பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.