எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விளக்கம் அளிக்க ஏன் அனுமதி அளிக்கவில்லை. சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் அளித்துள்ளார். அந்த விளக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:
மாண்புமிகு உறுப்பினர்கள், முதல்வர் பதில் சொல்ல மாட்டேன் என்கிறாரே, எப்போது பதில் சொல்வார் என்றெல்லாம் கேட்டிருக்கிறீர்கள்.
பதிலுரை திங்கட்கிழமை இருக்கிறது என்று நான் சொன்னேன். மாண்புமிகு முதலமைச்சர் பதில் சொல்லுகிறபோது பல ஆதாரப்பூர்வமான குற்றச்சாட்டை இங்கே வைத்தார்கள்.
ஒரு எதிர்க்கட்சிப் பொறுப்பிலே இருக்கின்றவர்கள் மக்கள் மன்றத்தின் முன்பாக அவர்களுடைய பேச்சு முழுமையாக நேரலை செய்யப்படுகிறபோது, நீங்கள் அமைதியாக இருந்திருக்க வேண்டும்… எப்படி நீங்கள் பேசுகிறபோது அமைச்சர் பெருமக்கள் பதில் சொல்லி நீங்களும் பதில் சொன்னீர்களோ, அப்படி அவர் பேச்சுக்கு அப்போதே பதில் சொல்லக்கூடிய வாய்ப்பெல்லாம் இருந்தது.
ஆனால், என்னுடைய அனுமதியில்லாமல் போஸ்டர்ஸைக் கொண்டுவந்து இங்கே காட்டுவதும், குரல் கொடுப்பதும்… உங்களுடைய நோக்கம் அவர்களுடைய பேச்சு வெளியே போகாமல் தடுக்கப்பட வேண்டும் என்பதற்காக இருந்திருந்தால், நிச்சயமாக இல்லை! நான் அதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.
அவர் பேச்சு ஆரம்பித்ததிலிருந்து… அவர் பேச்சு ஆரம்பித்ததிலிருந்து நான் பார்த்துக்கொண்டே இருக்கிறேன். அனைவரும் எழுந்து நின்று குரல் கொடுத்துக்கொண்டு, நீங்கள் அலுத்துப் போகிற வரைக்கும் குரல் கொடுத்துப் பார்த்தீர்கள். ஆனால் பேச்சை முழுமையாக அவர் முடித்திருக்கிறார். நிறைவாக அவர் முடித்திருக்கிறார்.
பதிலுரை என்று வருகிறபோது, முதலமைச்சர் எப்போது பேசுவார், எப்போது பேசுவார் என்று கேட்ட நீங்கள், பதிலளிக்க முடியுமா என்றெல்லாம் வினாக்களைத் தொடுத்த நீங்கள், பதிலளிக்கிறபோது அமைதியாக இருந்து கேட்டிருக்க வேண்டும்! ஏனென்றால் நாட்டு மக்களுக்கு அவர் சொல்வதும், பதில் சொல்வதற்கு நீங்கள் தயாராக இருந்தால் எப்படிப்பட்ட விளக்கங்கள் அளிக்க முடியும் என்ற வாய்ப்பெல்லாம் இருந்தது, அந்த வாய்ப்பையெல்லாம் இழந்துவிட்டீர்கள்.
என்னைப் பொறுத்தவரைக்கும் இந்த, இந்த அவையில் மாண்புமிகு முதலமைச்சர் பேசுகிறபோது ஆரம்பத்திலிருந்து கூச்சல், குழப்பம் விளைவித்தது தவறு என்று நான் கருதுகின்றேன். அதேபோன்று உங்க போஸ்டர்ஸையெல்லாம் இங்கே தூக்கிக் காட்டுகின்ற நேரமல்ல இது. விவாதப் பொருளாக இருக்கக்கூடிய காவல்துறை மானியத்தின் மீதும், தீயணைப்புத் துறை மானியத்தின் மீதும் பேச வருகின்ற உறுப்பினர்கள் இப்படிப்பட்ட போஸ்டர்ஸைக் காட்ட அனுமதி இல்லை.. இவ்வாறு சபாநாயகர் விளக்கம் அளித்தார்..




