தமிழக முதல்வர் விஜய் இன்று தனது பதிலுரையில் மிசாவில் கைதானதாக சொல்லப்படும் ஸ்டாலினின் உண்மை தன்மை குறித்தும், அமலாக்கத்துறை அறிக்கை குறித்தும், சர்க்காரியா கமிஷன் அறிக்கை குறித்தும் ஆவெசமாக பேசினார்.. அதன் சில பகுதிகள் இதோ:
நம்ம நண்பர்கள் எது பேசினாலும் நாங்கள் மிசாவை பார்த்தவங்க, மிசாவை பார்த்தவங்க… எல்லாத்துக்கும் மிசாவை கொண்டு வந்து விட்டா என்ன செய்யறதுன்னு தெரியல. ஐயா பெரியோர்களே! எல்லாருக்கும் அந்த மிசாவைப் பத்தின… ஹிஸ்ட்ரியைப் பற்றி… எல்லாருக்கும் நல்லா தெரியும்.
என்ன நடந்தது, நடக்குறது, நடக்கப் போறது… எல்லா மக்களும் பார்த்துட்டு இருக்காங்க. மக்களை விடவா நாம இவங்களை வந்து கமெண்ட் பண்ணிட போறோம். கவிஞர் கண்ணதாசன் அவர்கள், திமுக பத்தி Short and Sweet-ஆ ஒன்னு சொன்னாரு:
பேசிப் பழகிய பொய்
வாங்கிப் பழகிய கை
போட்டுப் பழகிய பை”
“Last week பேசும்போது என் டேபிள்ல ஒரு மூணு டிபார்ட்மென்ட் ஃபைல் இருக்கு, அதை எப்ப ஓபன் பண்ணனுமோ அப்ப ஓபன் பண்ணுவேன்னு சொன்னேன். உடனே எதிர்க்கட்சியில இருந்து இப்பவே ஓபன் பண்ணுங்களேன் அப்படின்னு சவால் எல்லாம் விட்டாங்க. இப்ப அதை ஓபன் பண்றதுக்கு முன்னாடி ஒரு சின்ன சாம்பிள் ஒன்னு பார்ப்போமா?
போன DMK Government-க்கு ED அனுப்புன டாக்குமெண்ட், அமலாக்கத்துறை… அமலாக்கத்துறை அனுப்புன டாக்குமெண்ட்… நான் மறுபடியும் சொல்றேன், நான் கோர்ட்டு, கேசு, விசாரணைக்குள்ள எல்லாம் நான் போகல. அதுக்குள்ள எல்லாம் நான் போகல. அந்த டாக்குமெண்ட்ல… அந்த டாக்குமெண்ட்ல இருக்கிற சில தகவல்களை மக்களுக்கு எடுத்து சொல்லணும்ல. இத… இத முழுசா படிச்சா இரண்டு மூணு நாள் ஆகும். Highlights-அ மட்டும் படிக்கிறேன்.
இந்த சர்க்காரியா கமிஷன், சர்க்காரியா கமிஷன்னு ஒன்னு இருக்கு. அதுல என்ன இருக்குன்னு கொஞ்சம் பார்க்கலாம். 1970s-ல திமுக ஆட்சி இருந்தப்போ, சத்தியநாராயணா பிரதர்ஸ்னு ஒரு கம்பெனிக்கு வீராணம் திட்டத்துக்கான குழாய்கள் தயாரிக்கிற டெண்டர் கொடுத்த விவகாரம் பத்தி சர்க்காரியா விசாரணை கமிஷன் இறுதி அறிக்கை தமிழ் டிரான்ஸ்லேஷன் பகுதி 1-ல் வீராணம் திட்டம்னு சொல்லி ஒரு தனி சாப்டரே இருக்கு.
அதுவும் 80 பக்கத்துக்கு இருக்கு. அதாவது 71-ஆம் பக்கத்துல இருந்து 150-ஆவது பக்கம் வரைக்கும் அந்த சாப்டர் இருக்கு. அதுல மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, அதுல டெண்டர் வேணும்னா 2.5% கமிஷன் தரணும்னு கலைஞரோட மருமகன் திரு மாறன் கேட்டாராம். டெண்டர் 16 கோடிக்கும் அதிகம்னு எஸ்டிமேட்டாம். 16 கோடிக்கு 2.5% னா 40 லட்சம் ரூபாய் கமிஷனா வரும்னு கணக்காம். இந்த கணக்கும் விசாரணை கமிஷன் அறிக்கையிலதான் இருக்கு.
2001-ல இதே அவையில முன்னாள் முதல்வர் மாண்புமிகு ஜெயலலிதா மேடமும் முன்னாள் அமைச்சர் திரு பொன்னையன் அவர்களும் இதே சர்க்காரியா விசாரணை கமிஷன் அறிக்கைய பத்தி பேசி இருக்காங்க. அப்பத்தான் இந்த சத்தியநாராயணா பேரும் அடிபட்டுச்சு, அவரோட மருமகன் புருஷோத்தமன் பேரும் அடிபட்டுச்சு.
50 வருஷத்துக்கு முன்னாடி நடந்த ஒரு விஷயத்தை 25 வருஷத்துக்கு முன்னாடி இதே சபையில பேசி இருக்காங்களேன்னு சொல்லி கொஞ்சம் தோண்டி எடுத்தோம். அப்பதான் எல்லா கூத்தும் வெளியே வர ஆரம்பிச்சது. அப்படி பார்த்தா அந்த அறிக்கை வந்து பொன்விழா ஆண்டே வந்துருக்கு, பவளவிழா… இல்ல, அது வேணாம்.”





