தமிழக சட்டமன்றத்தின் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக, தமிழக வெற்றிக் கழக முதலாவது பட்ஜெட் தாக்கல் செய்யும் கூட்டம் இன்று காலை தொடங்கியது. கூட்டத்தொடரின் முக்கிய அம்சமாக, தவெக அரசின் நிதியமைச்சர் மரிய வில்சன் தனது முதலாவது பட்ஜெட் உரையை சட்டமன்றத்தில் வாசிக்க தொடங்கினார். ஆட்சி மாற்றத்திற்கு பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் என்பதால், மாநிலத்தின் நிதி நிலைமை குறித்தும், தவெக அரசின் புதிய தொலைநோக்குத் திட்டங்கள் குறித்தும் அறிந்துகொள்ள ஒட்டுமொத்தத் தமிழகமும் மிகுந்த ஆவலுடன் இந்தச் சட்டமன்ற நிகழ்வை எதிர்பார்த்துக் காத்திருந்தது.
பட்ஜெட் தாக்கல் தொடங்குவதற்கு முன்பாக, எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் சட்டமன்றத்தில் திரண்டு பெரும் கூச்சலையும் அமளியையும் ஏற்படுத்துவார்கள் என்றே அரசியல் விமர்சகர்களும் ஊடகங்களும் கணித்திருந்தன. வழக்கமாக இதுபோன்ற முக்கிய நிகழ்வுகளின் போது எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்வதும் அல்லது முழக்கங்களை எழுப்பி கூட்டத்தை முடக்குவதும் தமிழக அரசியலில் தொடர்கதையாக இருந்து வந்துள்ளது. ஆனால், இன்று சட்டமன்றத்தில் நடந்த காட்சிகள் அனைவரது எதிர்பார்ப்பையும் தலைகீழாக மாற்றி, ஒட்டுமொத்தப் பார்வையாளர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
நிதியமைச்சர் மரிய வில்சன் பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கி ஒரு மணி நேரத்திற்கும் மேலாகிவிட்ட நிலையிலும், எதிர்க்கட்சி வரிசையில் இருந்து ஒரு சிறிய சலசலப்பு கூட எழவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உட்பட திமுக உறுப்பினர்கள் அனைவரும் அமைதியின் சிகரமாகத் தங்கள் இருக்கைகளில் அமர்ந்திருந்தனர். அவை கூட்டத்தில் குண்டூசி விழுந்தால் கூடச் சத்தம் கேட்கும் அளவுக்கு அசாத்திய அமைதி நிலவியது. நிதியமைச்சர் அறிவித்த ஒவ்வொரு நிதி ஒதுக்கீட்டையும், புதிய அறிவிப்புகளையும் எதிர்க்கட்சியினர் எவ்வித இடையூறும் இன்றி அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தது அவை உறுப்பினர்களையே வியப்பில் ஆழ்த்தியது.
இந்த அதிரடி மாற்றத்திற்குப் பின்னால் முதல்வர் விஜய்யின் கடுமையான எச்சரிக்கையும், தவெக அரசின் சட்டரீதியான அணுகுமுறையுமே காரணம் எனத் தலைமைச் செயலக வட்டாரங்களில் பேசப்படுகிறது. நேற்றைய தினம் தவெக எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்திலும், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆலோசனைகளிலும் சட்டமன்ற அவையின் கண்ணியத்தைக் காப்பது குறித்தும், அவையை முடக்க நினைத்தால் எடுக்கப்படும் சட்டப்பூர்வ கடுமையான நடவடிக்கைகள் குறித்தும் முதல்வர் விஜய் மிகத் தெளிவாக உணர்த்தியிருந்தார். தஞ்சை சம்பவத்திற்குப் பிறகு அரசு காட்டி வரும் சட்டரீதியான கெடுபிடிகளும் இந்த அமைதிக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.
முதலமைச்சர் விஜய்யின் அந்த அதிரடி உத்தரவுகளும், சட்டப்பூர்வ நடவடிக்கைகளும் எதிர்க்கட்சியினருக்கு இன்னும் நன்றாக நினைவிருக்கும் போலத் தெரிகிறது. அதனால் தான், எவ்வித அசம்பாவிதங்களிலும் ஈடுபடாமல், மிகச் சிறந்த ‘நல்ல பிள்ளைகளாக’ அமைதியாக அமர்ந்து பட்ஜெட் உரையை முழுமையாகக் கவனித்து வருகின்றனர். சட்டமன்றத்தின் கண்ணியத்தைக் காப்பாற்றும் வகையில் எதிர்க்கட்சியினர் காட்டும் இந்த அமைதி, ஜனநாயக முறையில் அவை நடவடிக்கைகளைச் சுமூகமாக நடத்திச் செல்ல மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.
எதிர்க்கட்சிகளின் அமளியே இல்லாமல் மிகவும் அமைதியான சூழலில் நிதியமைச்சர் மரிய வில்சன் தனது பட்ஜெட் உரையைத் தொடர்ந்து வாசித்து வருகிறார். பட்ஜெட் உரை முழுமையாக நிறைவடைந்த பிறகு, அவை ஒத்திவைக்கப்படும் வரை இதே போன்ற அமைதியை எதிர்க்கட்சியினர் தொடர்வார்களா என்பதைத் தவெக தொண்டர்களும் நிர்வாகிகளும் உற்றுநோக்கி வருகின்றனர். எது எப்படியோ, தவெக அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் எந்தவிதத் தடங்கலும் இன்றி மிகச் சிறப்பாகத் தொடங்கி நடைபெற்று வருவது ஆளுங்கட்சி தரப்பிற்குப் பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
