நீட் தேர்வால் மெடிக்கல் கல்லூரி ஓனர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் 650 கோடி ரூபாய் நஷ்டம்.. மெடிக்கல் கல்லூரி ஓனர்கள் அனைவரும் கிட்டத்தட்ட அரசியல்வாதிகள் அல்லது பினாமிகள்.. நீட் தேர்வால் தங்கள் வருமானம் போன கடுப்பில் மாணவர்களையும் கரப்பான்பூச்சிகளையும் தூண்டி விடுகிறார்கள்.. கரப்பான்பூச்சிகள் பணம் வாங்கிக்கொண்டு இதை ஒரு தொழிலாக செய்கிறார்கள்.. ஆனால் மாணவர்களே நீங்கள் ஏமாந்துவிட வேண்டாம்… நீட் அவசியம்…

ஐயா, ஒரு இடத்தைத் தோண்டினால், இன்னொரு இடத்தை மேடாக்க முடியும், ஆமாவா இல்லையா? ஏழைகளை இன்னும் கொஞ்சம் ஏழையாக்கினால், பணக்காரன் இன்னும் கொஞ்சம் பணக்காரன் ஆவான். இது உண்மையா இல்லையா? இந்த நீட் தேர்வு…

doctors

ஐயா, ஒரு இடத்தைத் தோண்டினால், இன்னொரு இடத்தை மேடாக்க முடியும், ஆமாவா இல்லையா? ஏழைகளை இன்னும் கொஞ்சம் ஏழையாக்கினால், பணக்காரன் இன்னும் கொஞ்சம் பணக்காரன் ஆவான். இது உண்மையா இல்லையா? இந்த நீட் தேர்வு வந்ததால, பணக்காரனால் சம்பாதிக்க முடியவில்லை. அதனால் யாருக்கு நல்லது நடந்தது? நடுத்தர மக்களுக்கும் ஏழைக்கும்.

திரும்ப நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு, பழைய மாதிரியே கொண்டு சென்றால், தனியார் மருத்துவக் கல்லூரிகள் தனித்தனியாக நுழைவுத்தேர்வு என்று ஒன்று வைப்பார்கள். அவர்கள் அதே மாதிரி இரண்டு கோடி ரூபாய் கேப்பிடேஷன் ஃபீஸ் வாங்கிவிட்டு, கொழுத்த லாபமாக வருஷத்துக்கு 650 கோடி ரூபாய் ஒவ்வொரு மருத்துவக் கல்லூரியும் சம்பாதித்துவிட்டுப் போய்விடுவார்கள்.

இந்தியா முழுவதும் மொத்தம் 400 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இவற்றுக்குச் சொந்தக்காரர்கள் அனைவரும் அரசியல் குடும்பத்தைச் சார்ந்தவர்கள்தான். எல்லாரும் நன்றாகச் சம்பாதித்துவிட்டுப் போய்விடுவார்கள். இதனால் சாதாரண மக்கள் பாதிக்கப்படுவார்கள். இதைப் பொதுமக்கள் முதலில் யோசிக்க வேண்டும்: இந்த இந்திய அரசு உங்களுக்கு ஏன் இவ்வளவு நல்லது செய்துள்ளது என்று?

ஏனென்றால், இதுதான் முதல் தடவை ஒரு அரசியல் குடும்பத்தைச் சாராத ஒரு அரசு இந்தியாவை ஆட்சி செய்கிறது. வாரிசுகள் இல்லாத பிரதமர் இந்த இந்தியாவை ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். அதனால் பொதுமக்கள் இதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்.