ஜனநாயகன் சந்தித்த பல்வேறு சவால்கள்… லிஸ்ட்ல இதெல்லாம் இருக்கா?

நாளை (23.7.2026) வெளியாக உள்ள ஜனநாயகன் படத்தில் இயக்குனர் எச்.வினோத் உடன் முதன் முறையாக கூட்டணி சேர்ந்துள்ளார் விஜய். தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய படங்களை இயக்கியவர் எச்.வினோத்.…

நாளை (23.7.2026) வெளியாக உள்ள ஜனநாயகன் படத்தில் இயக்குனர் எச்.வினோத் உடன் முதன் முறையாக கூட்டணி சேர்ந்துள்ளார் விஜய். தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய படங்களை இயக்கியவர் எச்.வினோத்.

அந்த வகையில் இவர் முதல் முறையாக விஜய் உடன் இணைந்து இருப்பதால் பலரின் கவனத்தையும் ஜனநாயகன் பெறுகிறது. பல்வேறு தடைகளைக் கடந்து ரிலீஸ் ஆகிறது. முதலில் இந்த ஆண்டு பொங்கலுக்கு ஜனவரி 9ம் தேதி படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டு இருந்தார்கள். சென்சார் சான்றிதழ் கிடைக்காததால படக்குழு சென்னை ஐகோர்ட்டுக்குப் போனது.

உச்ச நீதிமன்றமும் போனார்கள். படத்தை ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பி வைத்திருப்பதாக சென்சார் குழு சொன்னாங்க. படத்தில் மத உணர்வு புண்படுத்தப்பட்டு இருப்பதாகவும், ராணுவம் சம்பந்தப்பட்ட சில காட்சிகளை நீக்கணும்னு நாங்க சொல்லிருக்கோம்னு சொன்னாங்க. இப்படி பல்வேறு சிக்கல்கள் எழுந்தன. அப்புறம் மறுபடியும் வந்து ரிவைசிங் கமிட்டி படத்தைப் பார்த்து தான் சென்சார் வழங்கப்பட்டது.

சென்சார் பிரச்சனை ஒரு பக்கம் போக திடீர்னு முழுப்படமும் ஆன்லைனில் லீக்காகி விட்டது. படக்குழுவுக்கு இது பேரதிர்ச்சியாக இருந்தது. எடிட்டிங் டேபிளில் இருந்துதான் இந்தப் படம் கசிந்ததுன்னு சொல்லப்பட்டது. அப்புறம் படத்தில் பணியாற்றிய சில எடிட்டர்களை கைது செய்தனர். பல்வேறு சவால்களைத் தாண்டி படம் திரைக்கு வருகிறது.

‘யுஏ’ சான்றிதழ் தான் முதலில் வழங்கப்படுவதாக இருந்தது. ஆனால் தற்போது ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இது இயக்குனர் உள்பட படக்குழுவுக்கு வருத்தம்தான். என்றாலும் ரிலீஸ் ஆக இன்னும் தாமதம் ஏற்பட வேண்டாம். ஏற்கனவே காலதாமதத்தால் நிறைய நஷ்டம் ஆகிவிட்டது என்பதால் இதை பெரிய பொருட்டாகக் கொள்ளவில்லை என்றே தெரிகிறது.