உங்க இதயம் ஆரோக்கியமா இருக்கா? நீங்க பண்ண வேண்டிய எளிய 5 டெஸ்ட்!

வீட்டிலேயே டெஸ்ட் பண்ணலாம்… உங்க இதயம் ஆரோக்கியமா இருக்குதா என்று. வாங்க அந்த 5 ஸ்டெப் என்னன்னு பார்க்கலாம். உங்களது ரத்த அழுத்தம் 120, 80 தான் நார்மல். மருத்துவர் அறிவுரைப்படி இதைக் கன்ட்ரோலா…

வீட்டிலேயே டெஸ்ட் பண்ணலாம்… உங்க இதயம் ஆரோக்கியமா இருக்குதா என்று. வாங்க அந்த 5 ஸ்டெப் என்னன்னு பார்க்கலாம். உங்களது ரத்த அழுத்தம் 120, 80 தான் நார்மல். மருத்துவர் அறிவுரைப்படி இதைக் கன்ட்ரோலா வச்சிக்கோங்க. நல்ல கொழுப்பு எப்பவுமே உடலில் கம்மியா தான் இருக்கும்.

40 என்ற அளவில் இருக்கும். கெட்ட கொழுப்பு 200 மிலி கிராம்/டெசி லிட்டருக்குக்குக் கீழே இருக்கும். இதைக் கரெக்டா மெய்ன்டைன் பண்ணினா இதயம் பாதிக்கப்படாது. அடுத்து நமது மூச்சு. 1 நிமிஷத்துக்கு 16ல இருந்து 20 என்ற அளவில் மூச்சு விட வேண்டும். 1 நிமிஷத்துக்கு 20க்கு மேல போனா அது நல்ல மூச்சு கிடையாது. முடிந்தளவு பிராணாயாமம், தியானம் பண்ணலாம்.

அடுத்து எப்பவும் டயர்டா இருந்தா டாக்டரைப் பாருங்க. எப்பவும் சுறுசுறுப்பா இருக்குற மாதிரி உடம்பை வச்சிக்கோங்க. அடுத்து பல். நமது பற்கள் எப்பவுமே கிளீனா இருக்கணும். அதைக் கிளீனா வச்சிக்கலனா அதுல இருக்குற கெட்ட பாக்டீரியாக்கள் நாம எச்சை முழுங்கும்போது உள்ளே போய் இதயத்துல இன்ஃபெக்டிவ் என்டோ கார்டைட்டீஸ் என்ற ஒரு இன்பெக்ஷன் பிரச்சனை உருவாகுது. அதனால நாம வாய், பற்களை எப்பவும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். மேற்கண்ட தகவலை பிரபல மருத்துவர் டாக்டர்.பிள்ளை தெரிவித்துள்ளார்.