வயது ஆக ஆக கை, கால்கள் தளர்ச்சி அடைகின்றன. இளமையில் இருந்ததைப் போல சுறுசுறுப்பாக செயல்பட முடியவில்லை. இதுவே ஒருவித சோர்வு, மன அழுத்தத்தை வயதானவர்களுக்குத் தந்து விடுகிறது. அவர்களது கம்பீரமும் முன்பை விட குறைந்து விடுகிறது. நடை தளர்ந்து போகிறது. இவர்கள் தன் உடலை எப்போதும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சில அருமையான டிப்ஸ்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானவற்றைப் பார்ப்போம்.
பொதுவாக வயதானவர்களுக்கு கை, கால் மூட்டு வலி இருக்கும். எலும்பு பலம் இல்லாமல் இருக்கும். இவர்களுக்கு தேவையான சக்தி வைட்டமின் ஈ யில் தான் உள்ளது. இது எந்தெந்த உணவில் உள்ளது? அதைச் சாப்பிட்டால் என்னென்ன பலன்கள் என்று பாருங்க.
உணவே மருந்து என்பார் திருமூலர். அவரது பொன்மொழிக்கேற்ப நாம் உணவுகளின் அடிப்படையில் எப்படி சத்துகளைப் பெறுவதுன்னு பார்ப்போம்.
எலும்பு, மூட்டு பலத்திற்கு வைட்டமின் ஈ உணவுகள்
பாதாம் எலும்பு பலம் அதிகரிக்கும். சூரியகாந்தி விதை மூட்டு அழற்சி குறைக்கும். வேர்க்கடலை உடல் சக்தி, மூட்டு ஆதரவு. அவகாடோ மூட்டு இயக்கம் சீராகும். பசலைக்கீரை கால்சியம் உறிஞ்ச உதவும். ப்ரோக்கோலி எலும்பு அடர்த்தி மேம்படும். ஆலிவ் எண்ணெய் மூட்டு வலி குறைக்கும். கோதுமை முளை தசை, நரம்பு பலம் அதிகரிக்கும்.
வயதானவர்களுக்கு பாதுகாப்பு தரும்.
பாதாம் நினைவாற்றல், நரம்பு பலம் அதிகரிக்கும். சூரியகாந்தி விதை நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அவகாடோ இதய நலம், சக்தி அதிகரிக்கும். பசலைக்கீரை ரத்த சுத்திகரிப்பு, வேர்க்கடலை உடல் பலம் தரும்.
ஆலிவ் எண்ணெய் நல்ல கொழுப்பு, இதய பாதுகாப்பு தரும். ப்ரோக்கோலி செல்கள் பாதுகாப்பு. கோதுமை முளை நரம்பு, தசை பலம் அதிகரிக்கும்.
சரி. இதையெல்லாம் சாப்பிட்டால் வயதானவர்களுக்கு என்னென்ன மாற்றங்கள் உடலில் வரும்னு பாருங்க. நினைவாற்றல் குறைவு தாமதமாகும். நரம்புகள் பலப்படும். இதய நோய் அபாயம் குறையும். உடல் சோர்வு குறையும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். கண், மூளை ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.



