தலைப்பைப் படித்ததும் உலகின் எந்த மூலையிலும் கிடைக்காத மருந்துகள் என்று ஏதாவது இருக்கா என்று தோன்றலாம். உங்கள் ஆவல் கொஞ்சமும் குறையாத வகையில் இந்த தகவல்கள் உங்களுக்கு நிச்சயம் பயன்படும். சின்ன சின்ன வியாதிகளுக்கும் நாம் உடனே மருந்துகளைத் தான் நாடுகிறோம். எங்கே இருக்கிறது மெடிக்கல்? எங்கு நல்ல மருத்துவமனை உள்ளது என்று தான் தேடுகிறோம். ஆனால் இங்கு தரப்பட்டுள்ள மருந்துகளை நீங்கள் எடுத்துக் கொண்டால் உங்களுக்கு பெரும்பாலான வியாதிகள் வரவே வராது என்பது மட்டும் உண்மை. என்ன பார்க்கலாமா…
உடற்பயிற்சி என்பதும் ஒரு மருத்துவம். விரதம் இருப்பதும் ஒரு மருத்துவம். இயற்கை உணவு உண்பதும் ஒரு மருத்துவம். சிரிப்பு என்பதும் ஒரு மருந்து. நல்ல தூக்கம் என்பதும் ஒரு மருந்து. பச்சைக் காய்கறிகள் உண்ணுவதும் ஒரு மருந்து.
சூரிய ஒளியும் ஒரு மருந்து. ஒருவரிடம் அன்பாய் இருப்பதும் ஒரு மருத்துவம். நன்றி உணர்வோடு இருப்பதும் ஒரு மருத்துவம். தவறை மன்னிப்பதும் ஒரு மருத்துவம். தியானம் என்பதும் ஒரு மருத்துவம்
இறைவனை நினைப்பதும் துதிப்பதும் ஒரு மருத்துவம். மனதிற்கு பிடித்தமான பாடல் பாடுவதும் கேட்பதும் மற்றும் இசைக்கு நடனம் ஆடுவதும் ஒரு அற்புத மருத்துவம்.
சரியாகச் சிந்திப்பதும் சரியான மனநிலையில் இருப்பதும் ஒரு மருத்துவம். நல்ல நண்பர்களுடன் இருப்பது ஒரு நல்ல மருத்துவம். இந்த மருத்துவங்களை போதுமான அளவு நாம் எடுத்துக் கொண்டால், மெடிக்கலில் உள்ள இன்றைய மருந்துகள் பெரும்பாலும் தேவைப்படாது. உங்கள் உடலின் முழு பாதுகாவலன் நீங்கள் ஒருவர் தான். அதனால் அனைவரும் மேற்கண்ட நடைமுறைகளைத் தவறாமல் பின்பற்றுங்கள்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.



