Skip to content
  • இந்தியா
  • உலகம்
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழகம்
  • பொழுதுபோக்கு
டிசம்பர் 05, 2025
Tamil Minutes

Tamil Minutes

Tamil News online
Tamil Minutes
  • ஹோம்
  • செய்திகள்
  • பொழுதுபோக்கு
  • வெப் ஸ்டோரி
Tamil Minutes
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சிறப்பு கட்டுரைகள்
  • பொழுதுபோக்கு
  • விளையாட்டு
  • அழகுக் குறிப்புகள்
  • ஆன்மீகம்
  • உடல்நலம்
  • கல்வி
  • சமையல்
  • செய்திகள்
  • தொழில்நுட்பம்
  • வாழ்க்கை முறை
  • வேலைவாய்ப்பு
  • ஜோதிடம்
  • .
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • அழகுக் குறிப்புகள்
  • ஆன்மீகம்
  • உடல்நலம்
  • கல்வி
  • சமையல்
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தொழில்நுட்பம்
  • பொழுதுபோக்கு
  • வாழ்க்கை முறை
  • விளையாட்டு
  • வேலைவாய்ப்பு
  • ஜோதிடம்
Tamil Minutes
  • செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • தொழில்நுட்பம்
  • பொழுதுபோக்கு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • ஜோதிடம்
  • சிறப்பு கட்டுரைகள்
  • வாழ்க்கை முறை
  • சமையல்
  • உடல்நலம்
  • அழகுக் குறிப்புகள்
  • கல்வி
  • வேலைவாய்ப்பு
Home » india » auto driver iim b logo tshirt video viral
இந்தியா

பெங்களூரில் IIM-B லோகோ டீசர்ட் உடன் ஆட்டோ ஓட்டிய இளைஞர்.. பின்னணி என்ன? இளம்பெண்ணின் வைரல் பதிவு..!

பெங்களூரில் உள்ள IIM-B அதாவது Indian Institute of Management Bengaluru என்ற நிறுவனத்தின் லோகோ பொறித்த டீசர்ட் அணிந்து ஆட்டோ ஓட்டி வந்த ஓட்டுநர் ஒருவரின் கதை, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.…

Author Avatar

Bala Siva

ஆகஸ்ட் 15, 2025, 13:591:59 மணி iimblogoti shirt
iIm

பெங்களூரில் உள்ள IIM-B அதாவது Indian Institute of Management Bengaluru என்ற நிறுவனத்தின் லோகோ பொறித்த டீசர்ட் அணிந்து ஆட்டோ ஓட்டி வந்த ஓட்டுநர் ஒருவரின் கதை, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அபூர்வா என்ற பெண், தனது ஆட்டோ பயணத்தின்போது இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருக்கிறார்.

ஐஐஎம்-பி டீசர்ட் பின்னணி

ஆட்டோ ஓட்டுநர் அணிந்திருந்த டீசர்ட் பின்னால், “IIM Bangalore” என்று எழுதப்பட்டிருப்பதை கண்ட அபூர்வா, ஆர்வத்துடன் அவரிடம் பேச தொடங்கியுள்ளார். அப்போது, அந்த ஆட்டோ ஓட்டுநர் ஐஐஎம்-பி விடுதி உணவகத்தில் முழுநேர ஊழியராக பணிபுரிபவர் என்பது தெரியவந்துள்ளது. விடுதியில் தங்கியிருந்த மாணவர்கள், அவரது சிறந்த சேவைக்காக அன்பின் அடையாளமாக இந்த டீசர்ட் பரிசாக அளித்துள்ளனர். மேலும், குடும்பத்திற்கு உதவியாக இருக்க வேண்டும் என்பதற்காக பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவத்தை அபூர்வா தனது சமூக வலைத்தள பதிவில், “எனது ஆட்டோ ஓட்டுநர் ஐஐஎம்-பி டீசர்ட் அணிந்திருந்தார். அவரிடம் பேசியபோது, அவர் விடுதி உணவகத்தில் பணிபுரிவதாகவும், மாணவர்கள் இதனை அன்பளிப்பாக கொடுத்ததாகவும் தெரிவித்தார். மேலும், ஆட்டோ ஓட்டுவது பகுதி நேர வேலை” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பதிவு, சமூக வலைத்தளங்களில் விரைவாக பரவியது. பலரும் இதற்கு பல்வேறு விதமான கருத்துகளை தெரிவித்துள்ளனர். ஒரு பயனர், “அன்பு நாம் நினைப்பதை விட வேகமாகப் பயணிக்கிறது” என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். மற்றொரு பயனர், “ஐஐஎம்-பி மாணவர்கள் உண்மையில் அன்பானவர்கள். அவர்கள் தங்களை சுற்றியுள்ளவர்களை எவ்வாறு கவனித்துக்கொள்கிறார்கள் என்பதை நான் கடந்த வாரம் அறிந்தேன்” என்று எழுதியுள்ளார்.

இருப்பினும், ஒரு பயனர், “ஐஐஎம்-பி போன்ற கல்வி நிறுவனங்கள் லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிக்கும்போது, அங்கே பணிபுரியும் ஊழியர்கள் குடும்பத்தை காப்பாற்ற இரண்டு வேலைகள் செய்ய வேண்டியுள்ளது. அவர்களின் சம்பள கட்டமைப்பு குறித்து நாம் தெரிந்துகொள்ள வேண்டும்” என்று கேள்வி எழுப்பினார்.

Bala Siva
Bala Siva

டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.

தொடர்புடைய போஸ்ட்

supreme

சட்டவிரோதமாக ஊடுருவிய வங்கதேசத்தினர், ரோஹிங்கியாக்களை நாடு கடத்துங்கள்.. அவர்கள் அகதி அல்ல.. நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துபவர்கள்.. அகதிக்கும் ஊடுருவல்காரர்களுக்கும் வேறுபாடு உள்ளது. உச்சநீதிமன்றம் அதிரடி..!

By Bala Siva டிசம்பர் 5, 2025, 16:14
#ट्रेंडिंग हैशटैग:iimblogoti shirt

Post navigation

Previous Previous post: இந்தியா மீது டிரம்பின் 3 ஏமாற்றங்கள்.. இந்தியா செய்ய வேண்டிய மூன்று அதிரடி நடவடிக்கைகள்.. தானாக வழிக்கு வரும் டிரம்ப்..!
Next Next post: டிரம்ப் – புதின் பேச்சுவார்த்தை.. ரஷ்யாவுக்கு நிலப்பரப்பு.. டிரம்புக்கு நோபல் பரிசு வாய்ப்பு.. இந்தியாவுக்கு வரிவிதிப்பில் விலக்கு.. ஆனால் உக்ரைனுக்கு மட்டும் அல்வா?

District News

.

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Facebook
  • X
  • YouTube
  • Threads
  • Pinterest
  • LinkedIn
© Copyright All right reserved By Tamil Minutes WordPress Powered By