பொழுதுபோக்கு

குபேரா படத்துல நடிச்சே ஆகணும்னு ஆகிடுச்சு… உருக்கமான பதிவினை வெளியிட்ட ராஷ்மிகா மந்தனா…

ராஷ்மிகா மந்தனா தென்னிந்திய சினிமாவில் பணியாற்றும் பிரபலமான மற்றும் முன்னணி நடிகை ஆவார். இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர். இவர் கர்நாடகாவில் உள்ள குடகு மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தவர். 2016 ஆம் ஆண்டு கிரிக் பார்ட்டி என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் ராஷ்மிகா மந்தனா. முதல் படத்தின் மூலமாகவே அனைவரின் கவனத்தையும் ஈர்த்து பிரபலமானார் ராஷ்மிகா மந்தனா.

அதைத் தொடர்ந்து கன்னடம், தெலுங்கு மொழிகளில் ஹிட் திரைப்படங்களில் நடித்து நேஷனல் கிரஷ் என்ற பெயரை பெற்றார் ராஷ்மிகா மந்தனா. 2021 ஆம் ஆண்டு சுல்தான் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார். பின்னர் புஷ்பா திரைப்படத்தில் நடித்து தென்னிந்தியா முழுவதும் புகழ்பெற்றார் ராஷ்மிகா மந்தனா. பின்னர் விஜயுடன் இணைந்து வாரிசு படத்தில் நடித்தார். அடுத்து ஹிந்தி திரை உலகில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக அனிமல் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார்.

தற்போது தனுஷுடன் இணைந்து குபேரா திரைப்படத்தில் நடித்திருக்கிறார் ராஷ்மிகா மந்தனா. இந்த திரைப்படம் வெளிவர தயாராக இருக்கிறது. இந்நிலையில் ராஷ்மிகா மந்தனாவும் விஜய் தேவரகொண்டாவும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில் அது உண்மைதான் என்று ராஷ்மிகாவே ஒரு நிகழ்ச்சியில் ஒப்புக் கொண்டுள்ளார்.

அதைத்தொடர்ந்து தற்போது தனுஷ் உடன் இவர் நடித்த குபேரா திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ராஷ்மிகா மந்தனா உருக்கமான ஒரு பதிவை பதிவிட்டு இருக்கிறார். அதில் குபேரா திரைப்படத்தின் இயக்குனர் சேகர் கம்முலா மற்றும் தனுஷ் நாகார்ஜுனா ஆகியோரை புகழ்ந்து பேசி இருக்கிறார். இப்படிப்பட்ட ஜாம்பவான்களுடன் வேலை செய்ய எனக்கு வாய்ப்பு கிடைத்த போது இந்த படத்தில் நடித்தே ஆக வேண்டும் என்று எனக்கு தோன்றி விட்டது. இவர்களுடன் பணியாற்றியது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது என்று பகிர்ந்து இருக்கிறார் ராஷ்மிகா மந்தனா.

Avatar photo
Meena