பெண்களுக்கு அந்த இடத்தில் வலியா? இதோ சூப்பர் மருந்து!

பெண்கள் என்றாலே ஒரு விதத்தில் ஆண்களை விட அதிகம் வலியைத் தாங்குபவர்கள்தான். பிரசவ வலி ஒன்றே போதும். அதே போல பல வலிகள் இருந்தாலும் குறிப்பாக பலரையும் தாக்குவது இந்த வலிதான். அது என்ன…

ladies pain

பெண்கள் என்றாலே ஒரு விதத்தில் ஆண்களை விட அதிகம் வலியைத் தாங்குபவர்கள்தான். பிரசவ வலி ஒன்றே போதும். அதே போல பல வலிகள் இருந்தாலும் குறிப்பாக பலரையும் தாக்குவது இந்த வலிதான். அது என்ன வலி? அதில் இருந்து விடுதலை பெறுவது எப்படி? வாங்க பார்க்கலாம்.

பெண்கள் யூரினரி இன்ஃபக்ஷனால் (Urinary infections ) ரொம்ப அவதிப்படுவார்கள். அந்த வலி எவ்வளவு கொடுமையானது என்பது அவர்களுக்குத் தான் தெரியும். இதற்காக டாக்டரிடம் சென்றால் ஆண்டிபயாடிக் மருந்து கொடுப்பார்கள். ஒரு வாரம் கஷ்டப்பட வேண்டி இருக்கும். அதன்பிறகுதான் கட்டுக்குள் வரும். அதே நேரம் மீண்டும் வரத்தான் செய்யும். அப்போதும் எல்லா டெஸ்ட்டுகளும் எடுப்பார்கள். மீண்டும் மாத்திரைதான் கொடுப்பார்கள்.

அதே நேரம் மூலிகைகளை உபயோகித்தால் இந்தப் பிரச்சனைகள் எதுவும் இல்லை. இதற்கு ஒரே தீர்வு மூலிகை டீ தான். ஒரு மணி நேரம் கழித்து இன்னொரு டீ குடிங்க. உங்களுக்கு இருக்குற அந்த யூரினரி இன்ஃபக்ஷனுக்கு உடனடி தீர்வு கிடைக்கும். தொடர்ந்து இடைவெளி விட்டு குடிக்கும்போது முற்றிலும் சரியாகி விடும். அது என்ன? எப்படி தயாரிக்கணும்னு பாருங்க.

Aavarampoo

தேவையான பொருட்கள்: நெருஞ்சிமுள் செடியின் அனைத்து பாகங்கள் (சர்மூலம்), பூளைப்பூ, ஆவாரம்பூ, திருநீற்று பத்தி இலை, துளசி, லெமன் கிராஸ், சீரகம், மிளகு, லவங்க பட்டை, மஞ்சள்.

தயாரிக்கும் முறை: இவைகள் எல்லாம் ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு மூழ்கும் அளவுக்கு நீர் சேர்த்து பாத்திரத்தை மூடி நன்றாக கொதிக்க விடவும். கொதிக்க ஆரம்பித்ததும் அடுப்பை குறைத்து தொடர்ந்து வேக விடவும். இவைகளின் சாரம் முழுமையாக நீரில் கரைந்து இருக்கும். இப்போது இந்த நீருடன் சர்க்கரை சேர்த்து குடியுங்கள். 3 மணி நேரத்தில் வலி காணாது போகும்.