புஷ்பான்னா நேஷனல்ன்னு நினைச்சியா.. இண்டர் நேஷனல்.. தமிழில் பேசிய அல்லு அர்ஜுன்

By John A

Published:

அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா 2 திரைப்படம் வருகிற டிசம்பர் 5 அன்று உலகம் முழுக்க வெளியாகிறது. முதல் பாகமே தேசிய விருதினைச் தட்டிச் சென்ற நிலையில் இரண்டாம் பாகத்திற்கு எக்கச்சக்க எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பாட்னாவில் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் லட்சக்கணக்கானோர் திரண்டு படத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். அல்லு அர்ஜுனுடன் பகத் பாசில், ராஷ்மிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முழுக்க ஆக்ஷன் மற்றும் ஜனரஞ்சக திரைப்படமாக உருவாகியுள்ள புஷ்பா-2 திரைப்படத்தினை சுகுமார் இயக்கியிருக்கிறார்.

இப்படத்திற்கான புரோமோஷன் நிகழ்ச்சிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. நேற்று சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அல்லு அர்ஜுன் கலந்து கொண்டு புஷ்பா 2 படத்தில் இடம்பெற்ற ‘கிஸ் கிஸ் கிஸ்கிஸ்ஸ்கிக்’ என்ற பாடலை வெளியிட்டு நடனம் ஆடினார். தொடர்ந்து அல்லு அர்ஜுன் தமிழில் பேசத் தொடங்கினார். அப்போது ரசிகர்கள் தெலுங்கில் பேசுமாறு கோரிக்கை எழுப்ப, ஆனால் அல்லு அர்ஜுன் எந்த ஊரில் இருக்கிறோமோ அந்த ஊர் மொழியில் பேசுவது தான் மரியாதை என்று தொடர்ந்து தமிழிலேயே பேச ஆரம்பித்தார்.

AR ரஹ்மானை பிரிவது ஏன்…? சாய்ரா பானு கொடுத்த விளக்கம்…

அப்போது அவர் பேசியதாவது, “புஷ்பா படத்திற்காக பல இடங்களுக்குச் சென்றாலும் சென்னை வரும் போது அதோ ஃபீல் வேற. உங்கள் வாழ்க்கையில் முதல் 20 வருடங்கள் எப்படி இருக்கிறீர்களோ அப்படித்தான் கடைசி வரை இருப்போம் என்று கூறுவார்கள். அந்த வகையில் நான் எப்போதும் சென்னை தி.நகர் காரன் தான். என்னுடைய ஊரில் இந்த மாதிரி நிகழ்ச்சி ஒன்று வேண்டும் என விரும்பினேன். அது இப்போது நடந்திருப்பது மகிழ்ச்சி. நான் தமிழில் தான் பேசுவேன். அதுதான் இந்த மண்ணுக்குக் கொடுக்கும் மரியாதை.” என்று பேசினார் அல்லு அர்ஜுன்.

புஷ்பா தி ரைஸ் திரைப்படம் கடந்த 2021-ம் ஆண்டு வெளியாகி சக்கைப் போடு போட்டது. மேலும் அல்லு அர்ஜுனுக்கும் சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது. பாடல்கள், ஆக்ஷன் காட்சிகள் என அனைத்தும் தூள் கிளப்பின. தற்போது புஷ்பா 2 தி ரூல் அதைவிட அதிக எதிர்பார்ப்பினைக் கூட்டியிருக்கிறது. மேலும் பல மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். புஷ்பான்னா நேஷனல்ன்னு நினைச்சயா.. இண்டர்நேஷனலு என்ற பஞ்ச் வசனம் ரசிகர்களிடைய பிரபலமாகி வருகிறது.