எல்லாரையும் அவரு கலாய்ச்சாலும்.. வெளிய இத மட்டும் செய்ய மாட்டாரு.. கவுண்டமணியின் நல்ல குணம்.. பாராட்டிய ஜனகராஜ்..

By Ajith V

Published:

தமிழ் சினிமா மட்டுமில்லாமல் எந்த திரையுலகில் பிரபலமாக இருக்கும் நபர்களை எடுத்துக் கொண்டாலும் அவர்கள் திரையில் பார்ப்பதற்கும் நேரில் பார்ப்பதற்கும் வித்தியாசமான குணங்களை வெளிப்படுத்துவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. உதாரணத்திற்கு திரையில் ஹீரோக்களாக வரும் பலரும் நிஜ வாழ்க்கையில் வில்லன்களாக இருப்பதற்கும் சாத்தியம் உண்டு.

அதே போல திரையில் வில்லன்களாக நடித்து நம்மை எரிச்சலும், கோபமும் அடைய வைக்கும் பலர் நிஜ வாழ்க்கையில் தான் ஹீரோவாக திகழ்கின்றனர். இப்படி நாம் திரையில் பார்க்கும் நபர்கள் அப்படியே வேறொரு வாழ்க்கையை வாழ்ந்து வந்தாலும் இவற்றையெல்லாம் தாண்டி தனி ஒரு மனிதனாக ஒரே குணத்தை கொண்டிருப்பவர் தான் பிரபல காமெடி நடிகர் கவுண்டமணி.

கலாய்க்கும் கவுண்டமணி

முக பாவனைகள் உள்ளிட்ட எந்த ஒரு விஷயமும் இல்லாமல் தான் பேசும் வசனங்கள் மூலம் ரசிகர்களின் கைதட்டல்களை பெறக்கூடிய திறன் படைத்த கவுண்டமணி, செந்தில் மட்டும் இல்லாமல் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான காமெடி காட்சிகளை கொடுத்துள்ளார்.
Goundamani Good Characters

இன்றும் ஏதாவது சினிமா நிகழ்ச்சியில் கவுண்டமணி கலந்து கொண்டால் அவர் மேடையில் பேசும் கவுண்டர் வசனங்கள் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. ஆனால் அதே நேரத்தில் கவுண்டமணி எப்படிப்பட்ட ஆளாக இருந்தாலும் முகத்திற்கு நேராக பேசி விடுவார் என்றும் அதிகமாக கலாய்த்து அவர்களை ஒருவித வருத்தத்திற்கு ஆளாக்கி விடுவார் என்ற விமர்சனமும் உள்ளது.

ஆனால் கவுண்டமணியிடம் பழகும் பலருக்கும் அது அவரது இயல்பான குணம் என்பது தெரியும் என்பதால் அலட்டிக் கொள்வது கிடையாது. அதே நேரத்தில் ஒரு காலத்தில் ரஜினி, கமல் உள்ளிட்ட பலரும் கவுண்டமணி தங்களை கலாய்ப்பார் என அவர்களின் படத்தில் கூட நடிக்க வைக்க தயங்கியதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

கவுண்டமணியோட நல்ல குணம்

இந்த நிலையில் பலரும் கவுண்டமணியின் நகைச்சுவை மற்றும் தனிமனித கிண்டல் தொடர்பாக விமர்சித்து பேசினாலும் அதைத் தாண்டி அவரிடம் உள்ள சில நல்ல விஷயங்களை பற்றி பிரபல நடிகர் ஜனகராஜ் சில கருத்துக்களை ஒரு நேர்காணலில் பகிர்ந்து கொண்டுள்ளார். “கவுண்டமணி அண்ணன் ஒரு ஜென்டில் மேன். எப்பவுமே அவர் உண்டு அவர் வேலை உண்டுன்னு இருப்பாரு. அவரு கூட நடிக்கும் போது கவுண்டமணி அண்ணன் மத்தவங்கள என்ன வேணும்னாலும் பேசுவாரு.
Janagaraj Actor

ஆனா ஒருத்தரை பத்தி முதுகுக்கு பின்னாடி மட்டும் பேசமாட்டாரு. சில பேர் இருப்பாங்க. மத்தவங்கள நினைச்சு பொறாமைப்பட்டு அவங்கள என்ன பண்ணலாம் அப்படினு பிளான் பண்ணுவாங்க. ஆனா கவுண்டமணி அண்ணன் அப்படி கிடையாது. ரொம்ப வெளிப்படையா எல்லாத்தையும் பேசக்கூடிய மனுஷன். அவருகிட்ட நிறைய விஷயம் கத்துக்க முடியும். அவரு கூட சேர்ந்து வேலை பாக்குறப்போ ரொம்ப ஜாலியா இருக்கும்” என ஜனகராஜ் மிக பெருந்தன்மையோடு கவுண்டமணி பற்றி குறிப்பிட்டுள்ளார்.