கண் கலங்கிய நெப்போலியன்.. உறவுகள் சூழ கோலாகலமாக நடந்து முடிந்த மகன் திருமணம்..

By John A

Published:

முன்னாள் மத்திய அமைச்சரும், நடிகருமான நெப்போலியன் மூத்த மகன் தனுஷ்-அக்சயா திருமணம் இன்று ஜப்பான் நாட்டில் கோலாகலமாக நடைபெற்றது. மணமகன் தனுஷ் மணமகள் அக்சயா கழுத்தில் தாலியை கட்டியதும் நெப்போலியன் கண்கலங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

பாரதிராஜா இயக்கிய புது நெல்லு புதுநாத்து திரைப்படம் மூலம் தமிழ்த்திரையுலகில் அறிமுகமானார் நெப்போலியன். தொடர்ந்து எஜமான் உள்ளிட்ட படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்தவர் பிரதாப் போத்தன் இயக்கிய சீவலப்பேரி பாண்டி திரைப்படம் மூலம் ஹீரோவாக மாறினார். மேலும் எட்டுப்பட்டி ராசா, விருமாண்டி, ஐயா, சீமராஜா, மாயா, சுயம்வரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துப் புகழ்பெற்றார். மேலும் திமுகவில் இணைந்து மத்திய அமைச்சராகவும் பொறுப்பு வகித்தார்.

தக் லைஃப் ரிலீஸ் எப்போ தெரியுமா…? உலக நாயகன் பிறந்த நாளில் வந்த மாஸ் அப்டேட்..

நெப்போலியன் மகன் தனுஷ் தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்கு இந்தியாவில் தகுந்த சிகிச்சை வசதிகள் இல்லாத காரணத்தினால் குடும்பத்துடன் மகனின் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்காவில் செட்டில் ஆனார். அங்கு சாப்ட்வேர் நிறுவனம் நடத்திவரும் நெப்போலியன் அவ்வப்போது சென்னை வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் மகன் தனுஷூக்கு திருமணம் நிச்சயமானது. அமெரிக்காவில் செட்டில் ஆனாலும் தமிழ்நாட்டு பெண் வேண்டும் என்று அக்சயாவை நிச்சயித்தனர். இவர்களது நிச்சயதார்த்தம் கோலகலமாக நடைபெற்றது.

இந்நிலையில் இன்று ஜப்பான் நாட்டில் திருமணம் நடைபெற்றது. அமெரிக்காவில் திருமணம் முடித்தால் குடியுரிமை சிக்கல் எழும் காரணத்தினால் ஜப்பான் நாட்டில் தமிழ் பாரம்பரிய முறைப்படி திருமணம் நடைபெற்றது. இதில் ஏராளமான திரைப்பிரபலங்கள் பங்கேற்றனர். சமூக வலைதளங்கள் வாயிலாகவும், தொலைபேசி வாயிலாகவும் ஏராளமானோர் இத்தம்பதிகளுக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். திருமணத்தின் போது மணமகன் தனுஷ், மணமகள் அக்சயா கழுத்தில் தாலியை அணிவிக்கும் போது அருகில் இருந்த நெப்போலியன் கண்கலங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.