மருத்துவர், அரசியல்வாதி என அறிந்த தமிழிசையின் மற்றொருபக்கம்.. சினிமாவிலும் ஜொலித்த அக்கா..

By John A

Published:

பிரபல மருத்துவர், பாஜக தலைவர் என தமிழிசை சௌந்தர்ராஜனின் இருமுகங்கள் மட்டுமே நமக்குத் தெரியும். தெலுங்கானா மாநிலத்தின் கவர்னராகவும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் துணை நிலை ஆளுநராகவும் பதவி வகித்த தமிழிசை சௌந்தர்ராஜன் கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து தற்போது கட்சிப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் தமிழிசை சௌந்தர்ராஜன்.

பா.ஜ.க தொண்டர்களால் அன்போடு அக்கா என்று அழைக்கப்படும் தமிழிசை சௌந்தர்ராஜனுக்கு இன்னொரு திறமையும் உண்டு. அதுதான் சினிமாவில் பாட்டு எழுதியது. கடந்த 2015-ல் இயக்குநர் செல் அம் இயக்கத்தில் வெளியான திரு.வி.க. பூங்கா என்ற திரைப்படத்தில் மருத்துவர் தமிழிசை சௌந்தர்ராஜன் பாடல் ஒன்றை எழுதியிருக்கிறார் என்றால் ஆச்சர்யமாக உள்ளது.

சிவகார்த்திகேயனிடம் தி கோட் பட துப்பாக்கி காட்சி பற்றி கேள்வி.. SK கொடுத்த ரியாக்ஷன் பதில்..

இயக்குநர் செல் அம், தமிழிசை சௌந்தர்ராஜனின் மேடைப்பேச்சுகளில் கவரப்பட்டு அவரது எதுகை மோனை பேச்சில் ஆர்வம் கொண்டு தான் இயக்கிய திரைப்படத்தில் தமிழிசை சௌந்தர்ராஜனிடம் பாடல் எழுதித் தரும்படி கேட்டிருக்கிறார். ஆனால் தமிழிசை முதலில் மறுப்புத் தெரிவித்திருக்கிறார். அதன்பின் காட்சியைக் கேட்டு தந்தை மகளுக்கும் உள்ள உறவைக் குறிக்கும் பாடல் என்பதால் பின் எழுத ஒப்புக் கொண்டு சிறிது நேரத்திலேயே பாடல் எழுதிக் கொடுத்தாராம்.

என்னைப் படைச்ச சாமி.. என்று ஆரம்பிக்கும் இந்தப் பாடலின் வீடியோ யூடியூப்பில் உள்ளது. மேலும் அதற்கு முன்னதாகவே பொதிகை தொலைக்காட்சியில் தமிழிசை சௌந்தர்ராஜன் சில நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றிருக்கிறார். அப்பொழுதே கதை, பாடல்கள் எழுத வாய்ப்பு வந்திருக்கிறது. மேலும் ஒரு படத்தில் ஆசிரியராக நடிக்கவும் வாய்ப்பு வந்திருக்கிறது. ஆனால் அதை மறுத்திருக்கிறார் தமிழிசை சௌந்தர்ராஜன்.