இருப்பினும், இன்று காலை முதலே மாநாட்டு இடத்திற்கு தொண்டர்கள் வரத் தொடங்கிய நிலையில், கடும் வெயில் கொளுத்தி வருவதால் சிலர் மயக்கமடைந்து உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், மாநாட்டு திடலுக்குள் குடிதண்ணீர் மற்றும் உணவு வசதி சரியாக ஏற்பாடு செய்யப்படவில்லை எனத் தெரிகிறது. குறிப்பாக, மாநாட்டிற்கு வந்த தொண்டர்களுக்கு நிர்வாகிகள் தண்ணீர் பாட்டில்களை தூக்கி எறிந்ததாக கூறப்படுகிறது, இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த சூழலில், விஜய் தனது கட்சி நிர்வாகிகளை அழைத்து கண்டித்ததாகவும், “சரியாக திட்டமிடவில்லையா? ஏன் இந்த பிழை?” என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரிடம் கேள்வி எழுப்பியதாகவும் கூறப்படுகிறது. மேலும், தண்ணீர் பாட்டில்களை தூக்கி வீசாமல் கைகளில் கொடுக்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.