சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு என்ன ஆச்சு? மருத்துவர்கள் கூறுவது என்ன? பரபரப்பு தகவல்..!

By Bala Siva

Published:

 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உடல்நிலை நிலவரம் குறித்து மருத்துவர்கள் தெரிவித்த தகவல் தற்போது இணையத்தில் கசிந்து வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருடைய ரத்த நாளத்தில் அடைப்பு இருப்பதாக செய்திகள் கசிந்துள்ளன. இது குறித்து பரிசோதனை நடைபெற்று வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும், இருதய துறை சார்ந்த மருத்துவர்கள் ரஜினியை பரிசோதனை செய்ய இருப்பதாகவும், இசிஜி உள்பட சில பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் கூறப்படுகிறது. உரிய பரிசோதனைக்கு பிறகு அவர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும் கூறப்படுகிறது. ஏற்கனவே வயிறு தொடர்பான பிரச்சனையும் இருந்ததாக கூறப்படும் நிலையில், அது குறித்து பரிசோதனையும் செய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

இந்த நிலையில், ரஜினி அவர்களுக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனை தான் செய்யப்படுவதாக அவரது மனைவி லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு உடல் நலக் குறைவு காரணமாக திடீரென அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஜினிகாந்த், அரசியலுக்கு வருவதற்கான திட்டத்தை ரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.