ஷாரூக்கான் எல்லாம் ஓரம்போ.. சக்கைப் போடு போடும் ஸ்ட்ரீ 2.. ஜவான் வசூலை பின்னுக்குத் தள்ளி சாதனை…

Published:

இந்திய சினிமாவில் இதுவரை பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூல் செய்த திரைப்படமாக கடந்த ஆண்டு வெளியான ஜவான் திரைப்படம் சாதனை படைத்தது. சாதனைகள் என்றாலே தகர்க்கத்தானே என்ற அடிப்படையில் தற்போது ஜவான் படத்தின் சாதனையை முறியடித்துள்ளது ஸ்ட்ரீ 2.

மடாக் பிலிம்ஸ் ஸ்டுடியோஸ், ஜியோ பிலிம்ஸ் ஆகியவை இணைந்து தயாரித்த ஸ்ட்ரீ 2 திரைப்படத்தினை பாலிவுட் இயக்குநர் அமர் கௌஷிக் இயக்கியுள்ளார். சச்சின் ஜிகர் மற்றும் ஜஸ்டின் வர்கீஸ் ஆகியோர் இசையமைத்துள்ள இத்திரைப்படத்தில் ராஜ்குமார் ராவ், ஷ்ரத்தா கபூர், தமன்னா, அக்ஷய் குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.

தாலாட்டுப் பாட்டை குத்துப் பாட்டாக மாற்றிய இளையராஜா..இரண்டுமே சூப்பர் ஹிட் பாடலாக மாறிய சீக்ரெட்

கடந்த 2018ல் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ஸ்ட்ரீ திரைப்படத்தின் 2வது பாகம் இது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தமிழில் ரீமேக் மற்றும் பார்ட் 2 படங்கள் மண்ணைக் கவ்விய நிலையில் இந்தியில் வெளியான ஸ்ட்ரீ 2 திரைப்படம் பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கியுள்ளது.

கதையைப் பொறுத்தவரை பிரம்மாண்டமோ மெசேஜ் படமோ கிடையாது. முற்றிலும் பொழுதுபோக்கான காமெடி கலந்த கதைதான். இத்திரைப்படம் வெளியான ஒரு மாதத்தில் உலகம் முழுவதும் சுமார் 800 கோடிக்கு மேல் வசூலை வாரிக் குவித்துள்ளது. சப்தமில்லாமல் இந்தச் சாதனையை ஸ்ட்ரீ 2 திரைப்படம் நிகழ்த்தியுள்ளது.

படத்தின் மொத்த தயாரிப்புச் செலவு ரூ.120 கோடி மட்டுமே. ஆனால் அதனைக் காட்டிலும் பல மடங்கு லாபம் ஈட்டிக் கொடுத்திருக்கிறது ஸ்ட்ரீ 2. இந்தி சினிமாவில் இதுவரை வெளியான படங்களில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறது. முன்னதாக ஃபைட்டர், ஜவான் ஆகிய படங்கள் இந்த லிஸ்ட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்களுக்காக...