சுப்ரமணியபுரம் படத்துல ஆடியன்ஸை இந்த மாதிரியெல்லாம் ஏமாத்துனேன்… ஓபனாக பேசிய சசிகுமார்…

By Meena

Published:

சசிகுமார் தமிழ் சினிமாவில் பணியாற்றும் இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் ஆவார். ஆரம்பத்தில் இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக சேர்ந்தார் சசிகுமார். அவருடன் இணைந்து சேது திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினார்.

பின்பு அமீருடன் இணைந்து அவர் இயக்கிய மௌனம் பேசியதே, ராம் ஆகிய திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தார் சசிகுமார். 2008 ஆம் ஆண்டு சுப்ரமணியபுரம் என்ற திரைப்படத்தை இயக்கி அதில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் அறிமுகமானார் சசிகுமார். இந்த திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று மாபெரும் வெற்றி பெற்றது.

அடுத்ததாக 2010 ஆம் ஆண்டு ஈசன் என்ற திரைப்படத்தை இயக்கினார். அதற்கடுத்ததாக நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தார் சசிகுமார். அதன்படி சுந்தரபாண்டியன், போராளி, தாரை தப்பட்டை, குட்டி புலி, கொடி வீரன், கருடன், அயோத்தி, வெற்றிவேல் போன்ற நல்ல கதை அம்சம் கொண்ட படங்களில் நடித்து பிரபலமானார் சசிகுமார்.

தற்போது சசிகுமார் நடித்த நந்தன் திரைப்படம் வருகிற செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கிறது. ஏனென்றால் சசிகுமாரின் திரைப்படங்கள் கண்ணியமாக இருக்கும். குடும்பத்துடன் சென்று பார்ப்பதற்கு ஏதுவாக இருக்கும்.

மீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட சசிகுமார், சுப்பிரமணியபுரம் திரைப்படத்தில் ஆடியன்ஸை ஏமாற்றுவதற்காக பல வேலைகளை செய்ததாக கூறியிருக்கிறார். அவர் கூறியது என்னவென்றால், எனக்கு தம் அடிக்கிற பழக்கம் கிடையாது. அதை எப்படி பத்த வைக்கணும்னு கூட தெரியாது. அதனால சுப்ரமணியபுரம் படம் முழுக்க நான் வெறும் சிகரெட்டை தான் வாயில வச்சுட்டு நடிச்சிருப்பேன். என்கூட டும்கானு ஒரு கேரக்டர் இருப்பார் அவர் தான் படம் முழுக்க சிகரெட்டு பத்த வச்சுட்டு இருப்பார். இதை எத்தனை பேர் கவனிச்சாங்கன்னு தெரியல. நான் வெறும் சிகரெட்டை வாயில வச்சுட்டே படம் முழுக்க ஏமாத்திட்டேன் என்று கூறி இருக்கிறார் சசிகுமார்.