80, 90‘s கிட்ஸ் சூப்பர் ஹிட் ரொமான்ஸ் பாடல் இந்தப் படத்துல இருந்து தான் எடுத்தாங்களா? சென்சாரால் மீண்டும் படமாக்கப்பட்ட பாடல்..

By John A

Published:

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் 1982-ல் வெளியான திரைப்படம் தான் சகலகலா வல்லவன். இன்றும் ஆங்கிலப் புத்தாண்டு நாளன்று இந்தப் பாடலைக் கேட்காத தமிழர்களே கிடையாது. இசைஞானி இளையராஜா இசையில் கிட்டதட்ட 40 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் பாடல் இன்னும் டிரெண்டிங்கில் இருக்கிறது. இந்தப் படத்தில் இடம்பெற்ற மற்றொரு ரொமான்ஸ் பாடல்தான்

நிலா காயுது.. நேரம் நல்ல நேரம்..
நெஞ்சில் காயுது.. காமன் விடும் பானம்

கமல்ஹாசனும், அம்பிகாவும் இந்தப் பாடலில் படு ரொமான்ஸாக நடித்திருப்பார்கள். இன்றும் பல ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் இந்தப்பாடலை ஒன்ஸ்மோர் கேட்கும் ரசிகர்கள் இருக்கின்றனர். இப்படி 80, 90 களில் பிறந்தவர்களை சொக்க வைத்த இந்தப் பாடல் முதலில் இடம்பெற்றது வேறு திரைப்படம்.

விண்வெளியில் சுற்றுலா.. அசத்தலாக இறங்கி ஒய்யார நடைபோட்ட அமெரிக்க கோடீஸ்வரர்..

ஆம்..! 1981-ல் காரைக்குடி நாராயணன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் நல்லது நடந்தே தீரும். இந்தப் படத்தில் சுமன், சசிரேகா ஆகியோர் நடித்திருப்பார்கள். முதலில் நிலா காயுது பாடல் இந்தப் படத்தில் தான் இடம்பெற்றது. அதன்பின் சென்சார் போர்டில் படம் தணிக்கைக்குச் சென்ற போது பாடலின் பல காட்சிகளை எடுக்கச் சொல்லியிருக்கின்றனர். இல்லாவிட்டால் பாடலை முற்றிலும் நீக்கச் சொல்லியிருக்கின்றனர். இதனால் இயக்குநர் இந்தப் பாடலை அந்தப் படத்தில் சேர்க்க வில்லை.

பின் இளையராஜா அதற்கு அடுத்த வருடமே வெளிவந்த சகலகலா வல்லவன் படத்தில் காரைக்குடி நாராயணன் அனுமதி பெற்று பயன்படுத்தி இருப்பார். இரண்டாம் முறையாக பாடல் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆனது. பாடலை எழுதியவர் வாலிபக் கவிஞர் வாலி. பாடியவர்கள் மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி ஆகியோர்.