தளபதி விஜய், திரிஷா ஜோடி சேர்ந்தாலே அது பட்டையைக் கிளப்பும். இது வந்து வெற்றி கூட்டணி. ரெண்டு பேருக்குள்ளும் நிறைய கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகும். இவங்களுக்குள்ள அப்படி என்ன இருக்குன்னு தெரியல. ஆனாலும் பார்க்கறதுக்கு சூப்பர் ஜோடியாகத் தான் தெரியும்.
இப்போதும் கில்லி, திருப்பாச்சி படங்களைப் பார்த்தால் பட்டையைக் கிளப்பத் தான் செய்யும். பாடலுக்கு இருவரும் போட்டிப் போட்டுக் கொண்டு நடனமாடுவார்கள். கில்லியில் அப்படிப் போடு பாடல் ஒன்றே போதும். அந்த வகையில் கோட் படத்திலும் ஒரு பாடலில் இருவரும் சேர்ந்து பட்டையைக் கிளப்பி விட்டார்கள்.
இந்தப் பாடலுக்கு மட்டும் திரிஷா ஆடுவதற்கு 5 கோடி சம்பளமாம். 5 நிமிட பாட்டுக்கு 5 கோடியாம். கேட்கும்போதே தலைசுற்றுகிறது அல்லவா…!
படத்தில் பிரசாந்துக்கே அது தான் சம்பளம். ஆனாலும் அம்மணிக்கு இன்னும் மவுசு குறையல என்றே இதன் மூலம் தெரிகிறது. ஆனால் இது உண்மையானத் தகவலா என்று தான் தெரியவில்லை.
விஜயும், திரிஷாவும் கோட் படத்துக்கு முன்பு 5 படங்களில் இணைந்து நடித்துள்ளார்கள். ஆதி, கில்லி, குருவி, திருப்பாச்சி, லியோ என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றில் கில்லி, திருப்பாச்சி, லியோ படங்கள் மாஸ் ஹிட்டாயின.
இருவரும் சேர்ந்து திரையில் தோன்றும் போது எல்லாம் ரசிகர்களின் விசில் சத்தம் காதைக் கிழிக்கும். திருப்பாச்சி படத்தில் கட்டு கட்டு கீரைக்கட்டு பாடலும் சரி, குருவி படத்தில் டன்டானா டர்னா பாடலும் பட்டையைக் கிளப்பும் ரகங்கள்.
அத்தனைக்கும் மேலாக கில்லியில் தான் இந்த ஜோடி பட்டி தொட்டி எங்கும் பேசப்பட்டது. அதன்பிறகு கோட் படத்தில் இருவரும் இணைந்து பாடலுக்கு நடனமாடியதால் அந்தப் பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்புக்குள்ளானது.
விஜய் உடன் நடித்த பட அனுபவங்கள் குறித்து திரிஷா என்ன சொல்கிறார்னு பார்க்கலாமா…
முதல் படத்துல இருந்தே நானும் விஜயும் ஹிட் ஜோடி ஆகிட்டோம். ரெண்டு பேரும் சேர்ந்து நடிக்கணும்னு நிறைய பேரு எங்கிட்ட சொல்லிருக்காங்க.
ரெண்டு பேருக்கும் பேன்ஸ் கிளப் நிறைய இருக்கு. கில்லி, திருப்பாச்சி படம் எல்லாம் டிவியில் போடும்போது எனக்கு நிறைய மெசேஜ், ஸ்கிரீன்ஷாட்ஸ் எல்லாம் வரும் என்கிறார் திரிஷா.
அம்மணி சொல்றது எல்லாம் உண்மை தான். ஆனால் டிவில படம் போடும்போதும் கூட மொபைல்ல ஸ்கிரீன்ஷாட்ஸ் எடுத்து அனுப்புறது எல்லாம் ஓவர் தான்.