மூத்த நடிகர் தியாகராஜன் அவர்களின் மகன் தான் நடிகர் பிரசாந்த். இவர் தமிழ் சினிமாவில் பணியாற்றும் நடிகர் தொழிலதிபர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய திரைப்படங்களில் தோன்றியுள்ளார். தனது 17 வது வயதில் பள்ளி படிப்பை முடித்த விடுமுறையில் சினிமாவில் நடிக்க வந்த பிரசாந்த் பின்னர் சிறிது காலத்திலேயே புகழின் உச்சிக்கு சென்றார்.
1990களில் தென்னிந்தியாவின் பிரபலமான நடிகர்களுள் ஒருவராக இருந்தார் பிரசாந்த். விஜய் அஜித்துக்கும் மேல ஒரு படி மேலாகவே பிரபலமாக இருந்தார் பிரசாந்த். 1990 ஆம் ஆண்டு வைகாசி பொறந்தாச்சு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பிரசாந்த் தொடர்ந்து செம்பருத்தி, ஆணழகன் கண்ணெதிரே தோன்றினாள், ஜோடி ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார்.
1998 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கிய காதல் நகைச்சுவை திரைப்படம் ஆன ஜீன்ஸ் திரைப்படம் இவரை முன்னணி நடிகராகவும் வெற்றிகரமான நடிகராகவும் ஆக்கியது. இத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த திரைப்படத்தில் வரும் பாடல்களும் மிகப் பிரபலம் அடைந்தது. இவர் தமிழ் சினிமாவில் எங்கேயோ போய்விடுவார் என்று நினைத்த நேரத்தில் 2000 களின் ஆரம்ப கட்டத்தில் சரிவர கதைக்களத்தை தேர்ந்தெடுக்காததால் பின்னடைவை சந்திக்க ஆரம்பித்தார் பிரசாந்த்.
அதற்குப் பிறகு சினிமாவில் சற்று இடைவெளி எடுத்துக்கொண்ட பிரசாந்த் 2005 ஆம் ஆண்டு கிரகலட்சுமி என்பவரை திருமணம் செய்து பின்னர் 2009 ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்தும் செய்து விட்டார். அதற்கு பிறகு அவர் சினிமா வாழ்க்கையில் பின்னடவை எதிர்கொண்டு தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு இந்த வருடம் அந்தகன் என்ற திரைப்படத்தில் நடித்து கம்பேக் கொடுத்திருக்கிறார் பிரசாந்த்.
தற்போது வெளியாகியிருக்கும் கோட் திரைப்படத்திலும் நடிகர் விஜய் அவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பிரசாந்த். மீண்டும் அவர் சினிமாவிற்கு வந்ததை மக்கள் வரவேற்றனர். இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரசாந்த் அவர்களிடம் இரண்டாவது திருமணம் எப்போது செய்யப் போகிறீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியது என்னவென்றால் இரண்டாவது திருமணம் செய்வதற்கு நான் ரெடியாகத்தான் இருக்கிறேன். எங்கள் குடும்பத்திற்கு ஏற்றபடி என்னை புரிந்து கொள்ளும் பெண் கிடைத்தால் போதும் வேறு எந்த தகுதியும் தேவையில்லை என்று கூறி மனம் திறந்து பேசி இருக்கிறார் பிரசாந்த்.