பொழுதுபோக்கு

விநோத நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு செய்த ஆர்.ஜே.பாலாஜி.. வேண்டுதல் நிறைவேறியதால் மகிழ்ச்சி

இயக்குநர் சுந்தர் சி இயக்கிய தீயா வேலை செய்யனும் குமாரு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக என்ட்ரி ஆனவர் தான் ஆர்.ஜே. பாலாஜி. ரேடியா ஜாக்கியாகப் பணிபுரிந்தவரை திரையுலகிற்கு அழைத்து வந்தார் சுந்தர் சி. அதன்பின் மளமளவென படங்களில் நடிக்கத் தொடங்கினார் ஆர்.ஜே. பாலாஜி.

இவரை நடிகராக அறிந்தவர்களைக் காட்டிலும் கிரிக்கெட் வர்ணனையாளராக ரசிக்கத் தொடங்கியவர்கள்தான் அதிகம். இந்திய அணி ஆடும் கிரிக்கெட் போட்டிகளை சுவாரஸ்யமாக வர்ணனை செய்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். ஒருகாலத்தில் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த ஆர்.ஜே.பாலாஜி தனது திறமையால் நடிப்பு, இயக்கம், வர்ணனை என மீடியா துறையில் கோலோச்சி வருகிறார்.

மூக்குத்தி அம்மன், வீட்ல விஷேசம் போன்ற திரைப்படங்களையும் இயக்கியுள்ள ஆர்.ஜே.பாலாஜி தற்போது ஹீரோவாக நடித்து வருகிறார். மேலும் அடுத்த அம்மன் படமாக மாசாணி அம்மன் என்ற பெயரில் இயக்கப் போவதாகவும் செய்திகள் வருகின்றன. இதில் அம்மனாக திரிஷா நடிக்க உள்ளார் என்றும் இதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வருகின்றன.

ஒரு மனிதன் பிறக்கும் போதே இந்தக் குணமும் வந்திடும்… அதை இல்லன்னு சொல்றவனை நம்பாத… செல்வராகவன் அட்வைஸ்…

இந்நிலையில் கடவுள் பக்தி அதிகம் கொண்ட ஆர்.ஜே. பாலாஜி தனது வேண்டுதல் நிறைவேறியதற்காக வித்தியாசமான முறையில் நேர்த்திக்கடன் செலுத்தியிருக்கிறார். அதன்படி, கடலூர் மாவட்டம், தென்னம்பாக்கம் என்ற கிராமத்தில் உள்ள கோவிலில் வழிபாடு செய்து வேண்டுதல் வைத்திருக்கிறார். தற்போது அவரின் இயக்குநர் கனவு நனவானதால் வேண்டியபடியே ஓர் இயக்குநர் படம்பிடிப்பது போல சிலை ஒன்றைச் செய்து வைத்திருக்கிறார் ஆர்.ஜே.பாலாஜி.

பொதுவாக வேண்டுதல்களில் அன்னதானம் கொடுப்பது, அலகு குத்துவது, மாலை போடுவது, பால்குடம் காவடி எடுப்பது, மொட்டை அடித்துக் கொள்வது எனப் பல வகைகளில் இருக்கும். ஆனால் ஆர்.ஜே.பாலாஜியின் இந்த வித்தியாசமான நேர்த்திக்கடன் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Avatar photo
John A

ஊடகத் துறையில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருகிறேன். அச்சு ஊடகம், காட்சி ஊடகம், டிஜிட்டல் ஊடகம் ஆகியவற்றில் செய்திகள், கட்டுரைகள், சிறப்புச் செய்திகள், பேட்டிகள், விளம்பரப் பிரிவு, விநியோகம் என அனைத்துத் துறைகளிலும் பணியாற்றியிருக்கிறேன்.