ஒரே அறையில் தங்கிய 2 ஆண்கள் 2 ஐடி இளம்பெண்கள்.. நள்ளிரவு 1 மணிக்கு கதவை தட்டிய போலீஸ்.. அதிர்ச்சி சம்பவம்..!

By Bala Siva

Published:

ஒரே அறையில் இரண்டு இளைஞர்கள் மற்றும் இரண்டு இளம் பெண்கள் தங்கியதை அடுத்து நள்ளிரவு ஒரு மணிக்கு போலீசார் வந்து அறைக்கதவை தட்டி விசாரணை செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஹைதராபாத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் மற்றும் இரண்டு இளம் பெண்கள் சுற்றுப்பயணம் செய்த போது தங்குவதற்கு அறை ஏற்பாடு செய்தனர். அப்போது ஆண்கள் இருவருக்கும், பெண்கள் இருவருக்கும் என தனித்தனி அறைகள் கேட்டபோது, இரண்டு அறைகள் இல்லை என்பதால் ஒரே அறையில் தங்க முடிவு செய்தனர்.

இந்த நிலையில் திடீரென நள்ளிரவில் காவல்துறையினர் கதவை தட்டி திருமணம் ஆகாத இரண்டு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் ஒரே அறையில் தங்குவது கலாச்சார சீர்கேடு என்று சொல்லி அவர்களிடம் மாறி மாறி விசாரணை செய்ததாக தெரிகிறது. அந்த அறையில் இருந்த இரண்டு ஆண்களும் தங்களுக்கு வேறு அறை இல்லை என்பதால் ஒரே அறையில் தங்கி இருக்கிறோம் என்று என்றும் நாங்கள் நால்வரும் ஒரே அலுவலகத்தில் வேலை பார்க்கும் நண்பர்கள் என்று கூறியும் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வந்ததாக தெரிகிறது.

மேலும் பெண்களை விசாரிக்க பெண் போலீஸ் அதிகாரி இல்லை என்றும் தங்களை போலீசார் முழு சோதனை செய்ததாகவும் நாங்கள் அப்போது பாதுகாப்பாற்ற நிலையை உணர்ந்தோம் என்றும் அந்த அறையில் தங்கி இருந்த இரண்டு ஆண்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தங்களை அதிர்ச்சி அடைய செய்ததாகவும் தாங்கள் சுற்றுப்பயணத்துக்கு வந்து ஒரு நாள் இரவு தங்கி விட்டு மறுநாள் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டு இருந்தோம் என்றும் ஆனால் காவல்துறையினர் அத்துமீறி எங்களிடம் விசாரணை செய்தது அதிர்ச்சி அளித்ததாகவும் தெரிவித்தனர்.

நாங்கள் எங்கள் ஐடி கார்டு உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் காட்டிய போதிலும் அவர்கள் தொடர்ந்து விசாரணை செய்தார்கள் என்றும் தொடர்ந்து கலாச்சார சீர்கேடுகள் என்று எங்களை தகாத வார்த்தைகளில் பேசினார்கள் என்றும் அந்த அறையில் தங்கிய இரண்டு இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து விடுதியில் நிர்வாகிகள் கூறிய போது அவ்வப்போது காவல்துறையினர் எங்கள் ரிசார்ட்டில் அறை எடுத்து தங்குவார்கள் என்றும் அவர்களுக்கு இலவசமாக நாங்கள் அறையை கொடுப்போம் என்றும் ஆனால் சம்பவம் நடந்த அன்று போலீசார் அறை கேட்டபோது காலி இல்லை என்று கூறிய போது அவர்கள் ஆத்திரமடைந்து தங்கியிருக்கும் அனைத்து அறைகளையும் சோதனை செய்வோம் என்று அத்துமீறி ஒவ்வொரு அறையாக சோதனை செய்தார்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.