விருச்சிகம் ஆகஸ்ட் மாத ராசி பலன் 2023!

விருச்சிக ராசி அன்பர்களே! ஆகஸ்ட் மாதத்தினைப் பொறுத்தவரை பல நேர்மறையான விஷயங்கள் உங்கள் வாழ்க்கையில் நடந்தேறும். வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை எதிர்பார்த்த மாற்றங்கள் நிகழும், துணிந்து எந்தவொரு முயற்சியினையும் செய்யலாம். சம்பள உயர்வு, பதவி உயர்வு,…

viruchigam

விருச்சிக ராசி அன்பர்களே! ஆகஸ்ட் மாதத்தினைப் பொறுத்தவரை பல நேர்மறையான விஷயங்கள் உங்கள் வாழ்க்கையில் நடந்தேறும். வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை எதிர்பார்த்த மாற்றங்கள் நிகழும், துணிந்து எந்தவொரு முயற்சியினையும் செய்யலாம்.

சம்பள உயர்வு, பதவி உயர்வு, மேல் அதிகாரிகளின் பாராட்டு என நீங்கள் நினைத்த விஷயங்கள் ஈடேறும். தொழில்ரீதியாக வாடிக்கையாளர்கள் அதிகரிப்பர், நஷ்டத்தில் இருந்து மீள்வீர்கள்.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

பொருளாதாரரீதியாக எடுத்துக் கொண்டால் பணப் புழக்கம் இருந்தாலும், மற்றொருபுறம் செலவுகளும் அதிகமாகவே இருக்கும்; அலைச்சல், மன உளைச்சல்கள் நிறைந்த மாதமாகவே இருக்கும்.

திருமண காரியங்களைப் பொறுத்தவரை கைகூடி முடியும் நிலையில் இருந்தநிலையில் அனைத்தும் நின்று போகும். குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை கணவன்- மனைவி இடையே சிறு சிறு மனப் போராட்டங்கள் இருந்து கொண்டே இருக்கும்.

மாணவர்களைப் பொறுத்தவரை தேர்வுகளில் சிறப்பான மதிப்பெண் எடுப்பர், மிகவும் கவனத்துடனும், ஆர்வத்துடனும் படிப்பர். உயர்கல்வி சார்ந்த விஷயங்களில் ஆதாயப் பலன்களே ஏற்படும். படிப்புரீதியான கடனுதவிகள் கிடைக்கப் பெறும்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

இல்லத்தரசிகளைப் பொறுத்தவரை ஒருபுறம் தேவைகள் அதிகரித்துக் கொண்டே போக, மற்றொருபுறம் அதனைச் சமாளிக்கப் பொருளுதவி பெரிய அளவில் இல்லாமல் கஷ்டப்படுவீர்கள்.

உடல் ஆரோக்கியம் மிகச் சிறப்பாக இருக்கும்.