உலகின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றான ட்விட்டருக்கு போட்டியாக மெட்டா நிறுவனம் ஆரம்பித்துள்ள Threads என்ற சமூக வலைதளம் நேற்று முதல் இயங்கி வரும் நிலையில் முதல் நாளே இந்த சமூக வலைதளத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது ட்விட்டர் நிர்வாகத்தை அதிர்ச்சி அடைய செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மெட்டா நிர்வாகம் ஏற்கனவே பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்களை நடத்தி வருகிறது என்பதும் இவை இரண்டுமே பயனாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று உள்ளது என்பதும் தெரிந்ததே. இருப்பினும் ட்விட்டருக்கு போட்டியாக நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ள Threads மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பழைய மொபைலை விற்கும் முன் ரீசெட் செய்வது எப்படி? முழு விவரங்கள்..!
ட்விட்டரில் இருப்பது போலவே Threads சமூக வலைதளத்தில் 500 கேரக்டர்கள் வரை பதிவு செய்யலாம் என்பதும் அதேபோல் ஐந்து நிமிடங்கள் வரை வீடியோவும் பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய முதல் நாளிலேயே தமிழில் உள்ள பெரும்பாலான செய்தி ஊடகங்கள் Threads அக்கவுண்ட் ஓபன் செய்துள்ளன என்பதும் இதனால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ரூ.11,000 தள்ளுபடியில் கிடைக்கும் Xiaomi 11 Lite NE 5G.. முழு விவரங்கள்..!

மேலும் ட்விட்டரில் இருப்பது போலவே லைக், ஷேர், கமெண்ட் போன்ற வசதிகளும் இந்த Threads சமூக வலைதளத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. கூகுள் பிளே ஸ்டோரில் சென்று இந்த Threads செயலியை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.
உங்களுக்கு ஏற்கனவே இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் இருந்தால் தானாகவே Threads சமூக வலைதளத்தில் அக்கவுண்ட் ஓபன் ஆகிவிடும். ஒருவேளை இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் இல்லை என்றால் புதிய அக்கவுண்ட்டை ஓபன் செய்து கொள்ளலாம்.
அட்டகாசமான விவோ 5ஜி ஸ்மார்ட்போன்.. விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த தகவல்..!

இன்ஸ்டாகிராம் மூலம் அக்கவுண்ட் ஓபன் செய்வதாக இருந்தால் உங்களுடைய இன்ஸ்டாகிராமிற்கு ஒரு ரிக்வெஸ்ட் வரும் என்பதும் அதை நீங்கள் அப்ரூவல் செய்தால் உங்கள் அக்கவுண்ட் ஓபன் ஆகிவிடும் என்றும் அதேபோல் இன்ஸ்டாகிராமில் உள்ள ப்ரொபைல் பெயர் மற்றும் ப்ரொபைல் பிக்சர் தானாகவே வந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை நீங்கள் அதை மாற்ற வேண்டுமென்றாலும் அதில் வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டருக்கு போட்டியாக களம் இறங்கியுள்ள Threadsம் ட்விட்டர் அளவுக்கு மக்கள் மத்தியில் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
