ரசிகர்களின் தொல்லையால் அபராதம் கட்டிய விஜய்! அப்படி என்ன நடந்திருக்கும்?

By Velmurugan

Published:

தளபதி விஜய் வம்சி இயக்கத்தில் நடித்து வரும் வாரிசு திரைப்படம் பொங்கல் 2023 வெளியாவதற்கு தயாராக உள்ளது. தில் ராஜு தயாரிப்பில், விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா இணைந்து தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் படம் வெளியாக உள்ளது .

ஜனவரி தொடக்கத்தில் படம் வெளியாக உள்ளதால் படப்பிடிப்பு விறுவிறுப்பான வேகத்தில் நடந்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது.விஜய் தற்போது பெல்லாரியில் ஒரு சார்ட்பஸ்டர் பாடலின் படப்பிடிப்பை நடத்தி வருகிறார், இது நவம்பர் 19 ள் முடிவடைந்தது.

“பாடல் படப்பிடிப்பை முடித்த உடனேயே, படத்தின் அதிரடியான கிளைமாக்ஸை படமாக்க விஜய் மற்றும் ஒட்டுமொத்த குழுவும் ஹைதராபாத் செல்ல உள்ளனர், இது 10 நாள் படப்பிடிப்பு, மேலும் க்ளைமாக்ஸ் முழுவதும் ஆக்‌ஷன் மற்றும் எமோஷன் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

சமீபத்தில் பனையூரில் அலுவலகத்தில் விஜய் அவர்கள் விஜய் மக்கள் இயக்க உறுப்பினரை சந்திக்க வந்துள்ளார் அவரின் வருகையால் ரசிகர்கள் கூடினர். அப்போது காரில் ஏறி சென்ற விஜயை அவரது ரசிகர்களில் ஒருவர் அவரின்கண்ணத்தை பிடிக்க நேர்ந்த போது கோவத்தில் விஜய் கண்ணாடியை முடி வேகமாக காரில் சென்ற வீடியோ தற்போழுது வைரலாகி வந்தது .

அதை தொடர்ந்து விஜய் தனது காரை வேகமாக சென்றுள்ளார், அப்போதும் அவரது ரசிகர்கள் விடாமல் துரத்தி வந்துள்ளனர், அதுவும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

நயன்தாரா தங்கம் படத்தின் ரிலீஸ் தேதி வெளியீடு!

அந்த வீடியோவில் விஜய்யின் கார் கண்ணாடியில் கருப்பு கலர் ஸ்டிக்கர் ஒட்டியிருப்பது பலர் கவனித்துள்ளனர், அதை உடனடியாக கவனித்து விஜய் பெயரில் வழக்குப்பதிவு செய்து ரூ.500 அபாராதம் விதித்து சென்னை போக்குவரத்து போலீஸ்சர்கள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.