நயன்தாரா தங்கம் படத்தின் ரிலீஸ் தேதி வெளியீடு!

இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் 2015 ஆம் ஆண்டில் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் மலையாளப் படமான பிரேமம் மூலம் பிரபலமடைந்தார். அவரது கதை மற்றும் படப்பிடிப்பு உள்ள புத்துணர்ச்சி ஏராளமான பாராட்டுகளைப் பெற்றுத் தந்தது.

அவரது அடுத்த படத்திற்காக பலர் காத்திருந்தனர். ஆனால், உடல்நலம் மற்றும் பல்வேறு காரணங்களால் பிரேமம் படத்திற்குப் பிறகு அவரது புதிய படம் வெளியாகவில்லை. இறுதியாக 2021 இல் அவர் பிருத்விராஜ் சுகுமாரன் மற்றும் நயன்தாரா முக்கிய வேடங்களில் நடிக்கும் தனது புதிய திரைப்படமான கோல்ட் அறிவித்தார்.

முதலில் படம் செப்டம்பர் 8, 2022 அன்று திரைக்கு வரத் திட்டமிடப்பட்டது. ஆனால், இயக்குனர் தனது சமூக வலைததலத்தில்படம் ஓணத்திற்கு ஒரு வாரம் கழித்து வெளியிடப்படும் என்று அறிவித்தார். அதாவது லேடி சூப்பர்ஸ்டார் மற்றும் பிருத்விராஜ் சுகுமாரனின் ரசிகர்கள் செப்டம்பர் 15, 2022 முதல் தமிழ் மற்றும் மலையாளத்தில் படத்தை ரசிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

ஆனால் அப்போதும் படம் வெளியாக தவறியது , படத்தில் அஜ்மல் அமீர், கிருஷ்ண சங்கர், ஷபரீஷ் வர்மா மற்றும் பலர் துணை வேடங்களில் நடிக்கின்றனர். பிருத்விராஜ் புரொடக்ஷன்ஸ் மற்றும் மேஜிக் பிரேம்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ராஜேஷ் முருகேசன் இசையமைத்துள்ளார்.

இறுதியாக, தங்கம் டிசம்பர் 1ஆம் தேதி திரைக்கு வரும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

லோகேஷ்-விஜய் படம் திரையரங்குகளில் வசூல் அல்ல, சாதனை படைக்க முயற்சி!

பிரேமம் படத்துக்கு பாடல்கள் அமைத்த ராஜேஷ் முருகேசன் தங்கத்துக்கும் இசையமைத்துள்ளார். இயக்கத்துடன் அல்போன்ஸ் புத்ரன் எழுத்து, எடிட்டிங், ஸ்டண்ட், விஎஃப்எக்ஸ் மற்றும் அனிமேஷன் போன்றவற்றையும் கையாண்டுள்ளார். இப்படம் மலையாளம் மற்றும் தமிழ் மொழிகளில் டிசம்பர் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. OTT உரிமைகள் Amazon Prime வீடியோவில் உள்ளன

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.