வெறும் பேசுவதற்கு மட்டுமல்ல ஸ்மார்ட்போன்.. பலரும் அறியாத 5 பயனுள்ள விஷயங்கள்..!

ஸ்மார்ட்போன்கள் என்பது பேசுவதற்கும் மெசேஜ் அனுப்புவதற்கும் சமூக வலைதளங்களில் அரட்டை அடைப்பதற்கு மட்டும் பயன்பாடுவதற்கு அல்ல, அதில் பலரும் அறியாத 5 முக்கிய பயனுள்ள விஷயங்கள் உள்ளன. என்னென்ன என்பதை தற்போது பார்ப்போம்

1. நேரடி மொழிபெயர்ப்பு: கூகுள் லென்ஸ் வசதியைப் பயன்படுத்தி இதைச் செய்யலாம். கூகுள் லென்ஸ் இன்ஸ்டால் செய்து அதன் பயன்பாட்டை ஓப்பன் செய்தால் நீங்கள் எந்த உரையையும் நேரடியாக மொழிபெயர்க்க முடியும்.

2. வாய்ஸ் உதவி கட்டளை: உங்களுக்கு அருகில் ஒலிக்கும் பாடலை அடையாளம் காண, ஷாஜாம் போன்ற பயன்பாடுகளை இனி வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. “ஹலோ கூகுள், என்ன பாடல் ஒலிக்கிறது?” என்று குரல் உதவியாளர் கட்டளையை வழங்குவதன் மூலம் நீங்கள் Google ஐக் கேட்டு அது என்ன பாடல் என்பதை அறிந்து கொள்ளலாம்.

3. ரிமோட் கண்ட்ரோல் ஆக பயன்படுத்தலாம்: பல ஆண்ட்ராய்டு போன்களில் ஐஆர் பிளாஸ்டர் உள்ளது, இதை ஏசி, டிவி போன்ற சாதனங்களுடன் இணைக்கப் பயன்படுத்தலாம். இதை ஸ்மார்ட் ரிமோட் கண்ட்ரோல் என்று நினைத்துக்கொள்ளுங்கள்.

4. மெட்டல் டிடெக்டராக பயன்படுத்தலாம்: ஆண்ட்ராய்டு மற்றும் iOS சாதனங்களில் மெட்டல் டிடெக்டர் செயலிகளை டவுன்லோடு செய்வதன் மூலம் இதைச் செய்யலாம்.

5. மவுஸ் ஆக பயன்படுத்தலாம்: நீங்கள் ப்ளூடூத்-இயக்கப்பட்ட வயர்லெஸ் மவுஸைப் பயன்படுத்தினால் உங்கள் மொபைலின் செட்டிங் சென்று இணைப்பிற்குள் சென்று, புளூடூத்தை இயக்கி, சாதனங்களை இணைக்கவும். உங்கள் கம்ப்யூட்டரின் மவுஸ் சரியாக வேலை செய்யவில்லை என்றால் ஸ்மார்ட்போனையே மவுஸ் ஆக பயன்படுத்தலாம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews