ஆக்சன் கிங் அர்ஜுன் இயக்கி நடித்த அதிரடி திரைப்படங்கள் என்னென்ன தெரியுமா?

தமிழ் சினிமாவில் 80,90களில் துள்ளல் ஹீரோவாக வலம் வந்தார் நடிகர் அர்ஜுன். தற்பொழுது வில்லனாக பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஹீரோவாக தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்து தற்பொழுது வில்லனாக மாறி மக்கள் மனதை கவர்ந்து வரும் ஆக்சன் கிங் அர்ஜுன் இயக்கத்தில் நடித்த திரைப்படங்களின் தொகுப்பை இந்த பதிவில் பார்க்கலாம்.

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என பல திறமைகளை தன்வசம் கொண்ட ஆக்சன் கிங் அர்ஜுன் 1992 ஆம் ஆண்டு அர்ஜுன் இயக்கி நடித்த திரைப்படம் சேவகன். இந்த படத்திற்கு இசை மரகதமணி, தயாரிப்பு ஸ்ரீராம் பிலிம்ஸ் இன்டர்நேஷனல். இந்த படத்தில் நடித்த நடிகர்கள் அர்ஜூன், குஷ்பூ, கேப்டன் ராஜு, நாசர், வெண்ணிறாடை மூர்த்தி.

அடுத்ததாக 1993 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் பிரதாப். இந்த படத்திற்கு இசை மரகதமணி தயாரிப்பு அர்ஜுன் ஸ்ரீராம் பிலிம்ஸ் இன்டர்நேஷனல். இந்த படத்தில் நடித்த நடிகர்கள் அர்ஜுன், குஷ்பூ, தேவன், அஞ்சு, ராக்கி ராஜேஷ், ஜே.டி சக்கரவர்த்தி, ஜனகராஜ், கேப்டன் ராஜ், டி ஆர் சரஸ்வதி மற்றும் பல நடித்திருந்தனர். இப்படம் வெற்றியை பெற்றது.

1994 இல் வெளிவந்த திரைப்படம் ஜெய்ஹிந்த். இந்த படத்தின் இசை வித்தியாசாகர். தயாரிப்பு மிசின் என்டர்பிரைசஸ். இந்த படத்தில் நடித்த நடிகர்கள் அர்ஜுன், ரஞ்சிதா, தேவன், மேஜர், சுந்தர்ராஜன், மனோரமா, கவுண்டமணி செந்தில், சந்திரசேகர், ராஜேஷ் சாருஹாசன் வைஷ்ணவி மற்றும் பல நடித்திருந்தனர் இப்படம் அர்ஜுனனின் பிளாக்பஸ்டர் படம் ஆகும்.

1998 இல் வெளிவந்த திரைப்படம் தாயின் மணிக்கொடி. இந்த படத்தின் இசை வித்தியாசாகர் தயாரிப்பு டி. சுதாகர் ராஜு. இந்த படத்தில் நடித்த நடிகர்கள் அர்ஜூன், நிவேதிதா, விஜயகுமார், கவுண்டமணி, சந்திரசேகர், நரேன், சார்லி,வெண்ணிறாடை மூர்த்தி பல நடித்திருந்தனர் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றியை பெற்றது.

2001 இல் வெளிவந்த திரைப்படம் வேதம். இந்த படத்தின் இசை வித்தியாசாகர், தயாரிப்பு அர்ஜுன் ஸ்ரீராம் பிலிம்ஸ் இன்டர்நேஷனல். இந்த படத்தில் நடித்த நடிகர்கள் அர்ஜூன், திவ்யா,மும்தாஜ் ,கவுண்டமணி செந்தில், விசு, மயில்சாமி, விஜய் கிருஷ்ணராஜ் மற்றும் பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்தில் நடிகர் விஷால் உதவி இயக்குனர்களில் ஒருவராக பணியாற்றியுள்ளார். இப்படம் சுமாராக ஓடியது

2002இல் வெளிவந்த திரைப்படம் ஏழுமலை. இந்த படத்தின் இசை மணி சர்மா, தயாரிப்பு ரவிச்சந்திரன். இந்த படத்தில் நடித்த நடிகர்கள் அர்ஜுன், சிம்ரன், கஜானா, மும்தாஜ், விஜயகுமார், வையாபுரி மற்றும் பல நடிகர்கள் நடித்திருந்தனர். இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

2003இல் வெளிவந்த திரைப்படம் பரசுராம். இந்த படத்தின் இசை ஏ ஆர் ரகுமான், பின்னணி இசை பிரவீன் மணி. படத்தின் தயாரிப்பு அன்பாலயா பிலிம்ஸ் கே பிரபாகரன். இந்த படத்தில் நடித்த நடிகர்கள் அர்ஜூன், அப்பாஸ், கிரண், காயத்ரி ரகுராம், ராஜேஷ், கவுண்டமணி, மன்சூர் அலிகான், வினு சக்கரவர்த்தி, சாருஹாசன், வையாபுரி மற்றும் பல நடித்த வெற்றி படமாகும்.

தளபதி 68 படத்தில் இப்படி ஒரு தங்கச்சி சென்டிமென்ட்டா… அப்போ அந்த தங்கச்சி யாருப்பா?

2006 இல் வெளிவந்த திரைப்படம் மதராசி. இந்த படத்தின் இசை டி இமான், தயாரிப்பு சுபா சந்திப்பு. இந்த படத்தில் நடித்த நடிகர்கள் அர்ஜுன்,வேதிகா, ஜெகபதிபாபு, கஜாலா, விவேக், ராஜ்கபூர், வெண்ணிறாடை மூர்த்தி, சிஸ்டர் மனோகர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் சுமாரான வெற்றியை பெற்றது.

2014 இல் வெளிவந்த திரைப்படம் ஜெய்ஹிந்த் 2. இப்படம் கன்னடத்தில் அபிமன்யு என்ற பெயரில் தயாரிக்கப்பட்டது. இந்த படத்திற்கு இசை அர்ஜுன் ஜானியா, தயாரிப்பு அர்ஜுன் ஸ்ரீராம் பிலிம்ஸ் இன்டர்நேஷனல். இந்த படத்தில் நடித்த நடிகர்கள் அர்ஜுன்,சாவ்லா ராகுல், தேவ் மனோபாலா, மயில்சாமி,போஸ் வெங்கட், யோகி பாபு, சிசர் மனோகர் மற்றும் பல நடித்திருந்தனர். இப்படம் தமிழில் தோல்வியை தழுவியது. மேலும் கன்னடத்தில் வெற்றியடைந்தது. கன்னடத்தில் இரண்டாவது சிறந்த திரைப்படத்துக்கான கர்நாடக மாநில திரைப்பட விருதை வென்றது .

2018 இல் வெளிவந்த திரைப்படம் சொல்லி விடவா. இது கன்னடம் மற்றும் தமிழில் ஒரே நேரத்தில் தயாரிக்கப்பட்டது. கன்னடத்தில் பிரேமா பராகா என்ற பெயரிடப்பட்டது. இந்த படத்திற்கு இசை ஜாஸி தயாரிப்பு நிவேதிதா அர்ஜூன் ஸ்ரீராம் பிலிம்ஸ் இன்டர்நேஷனல். இந்த படத்தில் நடித்த நடிகர்கள் சரத்குமார், ஐஸ்வர்யா, அர்ஜுன், சுஹாசினி, பிரகாஷ்ராஜ், அவினாஷ், ராகவேந்திரன், யோகி பாபு, சதீஷ் போண்டாமணி மற்றும் பல நடித்திருந்தனர். இப்படம் கன்னடத்தில் வணிக ரீதியில் வெற்றியை பெற்றது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews