16 வயதினிலே ‘சப்பாணி, மயில்‘ கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்களா? சீக்ரெட் சொன்ன பாரதிராஜா

இந்திய சினிமா உலகையே ஓவர்நைட்டில் புரட்டிப் போட்ட ஒரு படம் தான் 16 வயதினிலே. ஸ்டுடியோவிற்குள் அடைபட்டுக் கிடந்த இந்திய சினிமாவினை கிராமத்துப் பக்கம் இழுத்துச் சென்று கிராமத்து அழகியலையும், வட்டார வழக்கையும் திரையில் கொண்டு வந்து நிறுத்தியவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா.

தனது முதல் படத்திற்காக நண்பர் ராஜ்கண்ணுவிற்காக மூன்று கதைகளைக் கூறியிருக்கிறார் பாரதிராஜா. முதலாவதாக சிவப்பு ரோஜாக்கள் கதையும், இரண்டாவதாக இசை சம்பந்தப்பட்ட கதையும், மூன்றாவதாக 16 வயதினிலே கதையையும் சொல்ல ராஜ்கண்ணு 16 வயதினிலே கதையைத் தேர்வு செய்திருக்கிறார். மேலும் ராஜ்கண்ணு இந்தப் படம் அவார்டு படம் போன்று இருக்குமோ என்று யோசிக்க பின்னர் பாரதிராஜா அதை மேலும் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

இப்படியாக முதன் முதலில் 16 வயதினிலே படம் உருவாக ஆரம்பித்தது. இந்தப் படத்தில் இன்றளவும் பேசப்படும் கதாபாத்திரங்களான சப்பாணி, மயில் கதாபாத்திரங்களுக்கு முதன் முதலாக யாரைத் தேர்வு செய்தார்கள் தெரியுமா? அப்போது ஹீரோவாக உருவெடுத்து நடித்துக் கொண்டிருந்த நாகேஷ் மற்றும் ரோஜா மணி ஆகியோரைத் தேர்ந்தெடுத்தனர். அதன்பின் கலர் படமாக எடுக்கலாம் என எண்ணி, பட்ஜெட் காரணமாக கமல் நாயகன் ஆனார்.

முதல் மேடையிலேயே பல்பு வாங்கிய லியோனி.. பட்டிமன்ற நடுவராக உருவெடுத்த சுவாரஸ்ய பின்னனி

ஆனால் முதலில் கமல் இந்தக் கதாபாத்திரத்திற்கு செட் ஆவாரா என்று யோசித்த பாரதிராஜாவிடம் கமல் திடீரென தான் அணிந்திருந்த சட்டையை கழற்றி கீழே போட்டு அழுக்குபடுத்தி, வாயில் வெற்றிலை போட்டு, முடியைக் களைத்துவிட்டு “சந்தைக்கு நேரமாச்சு.. ஆத்தா வையும் காசு கொடு” என்று வெள்ளந்தியாக நடித்துக் காட்ட பாரதிராஜாவுக்கு நம்பிக்கை பிறந்துள்ளது.

இப்படி நாகேஷ், ரோஜாமணிக்குப் பதிலாக கமல், ஸ்ரீ தேவி இப்படத்தில் இணைந்தனர். கிட்டத்தட்ட 5 லட்சம் என்று போடப்பட்ட பட்ஜெட் 4.75 லட்சத்திலேயே முடித்துக்காட்டினார் பாரதிராஜா. அதன்பின்பு படம் வெளியாகி 175 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது. இப்படத்தில் கமலுக்கு 27,000 சம்பளமும், ரஜினிக்கு 2,500, ஸ்ரீதேவிக்கு 9,000 சம்பளமும் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் செந்தூரப் பூவே பாடலுக்காக பாடகி ஜானகிக்கு முதன் முதலாக தேசிய விருதும் கிடைத்தது. மேலும் பல சிறப்புகளை 16 வயதினிலே பெற்றுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...