லோகேஷ் கனகராஜ் இவ்வளவு கமல் வெறியனா? மாஸ்டர் படத்துல இத கவனிச்சீங்களா?

ஓர் இயக்குநர் என்பவர் தான் திரைப்படம் எடுக்கும் போது காட்சிகளை அமைப்பில் முன்கூட்டியே இப்படித்தான் வரவேண்டும் என்று திட்டமிட்டிருப்பார். ஆனால் ஒரு ரசிகனாக இருந்து அவர் படங்களைப் பின்பற்றி பின்னர் அவரையே வைத்து இயக்கிய பெருமை லோகேஷ் கனகராஜுக்கு உண்டு.

தீவிர கமல் ரசிகரான லோகேஷ் இதை மாஸ்டர் படத்தில் சொல்லியிருப்பது நாம் அறிந்திராத ஒன்று.  நாடி நரம்பெல்லாம் சினிமாவில் ஊறிப்போன ஒருத்தரால் தான் இந்தமாதிரி மேக்கிங்களை தர முடியும் என்று சொன்னால் அது மிகையாகாது. மாஸ்டர் பட காட்சிகள் பலவற்றைப் பார்க்கும் போது, கமல்ஹாசனின் நம்மவர் படம் நமக்கு ஞாபகம் வந்து போகும். நம்மவர் படத்தில் புரபஸராக வந்து மாணவர்களைத் திருத்தும் கமல்ஹாசன் ரோலை அப்படியே மாஸ்டரில் விஜய்க்கு புகுத்தியிருப்பார்.

இது போல் படம் எடுப்பது எல்லாரும் செய்யும் ஒன்றுதான் என்றாலும் அந்தப் படத்தை இதில் எவ்வாறு தொடர்பு படுத்தி எடுத்துள்ளார் என்பதை எண்ணிப்பார்த்தால் வியப்பாக இருக்கிறது.

அதன்படி மாஸ்டர் vs நம்மவர் பட ஒற்றுமைகளைப் பார்க்கலாம்

இரு படங்களிலும் கல்லூரியில் தேர்தல் நடந்து பின் வன்முறை ஏற்படுவதை போன்ற காட்சி இருக்கும். நம்மவர் படத்தில் கரண் கல்லூரி தேர்தலில் தோற்பதை போல மாஸ்டரில் சாந்தனு கல்லூரி தேர்தலில் தோற்பார். நம்மவர் படத்தில் கல்லூரியை சுத்தம் செய்வார்கள் மாஸ்டரில் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியை சுத்தம் செய்வதை போல காட்சியமைத்திருப்பார்கள்.

தல அஜீத்-க்கு பின்னணி பாடிய உலக நாயகன் : இந்தப் படத்துல இவ்வேளா ஸ்பெஷல் இருக்கா?

நம்மவர் படத்தில் கமல்ஹாசன் கதாபாத்திரத்தின் பெயர் செல்வம் ஆனால் மற்றவர்கள் அனைவரும் அவரை வி.பி(VP) என்று அழைப்பார்கள் அதேபோல் மாஸ்டரில் விஜய் கதாபாத்திரத்தின் பெயர் ஜான் துரைராஜ் ஆனால் மற்றவர்கள் அனைவரும் அவரை ஜெ.டி(JD) என்று அழைப்பார்கள்.

நம்மவர் படத்தில் கல்லூரியில் போதைக்கு அடிமையான மாணவர்களை கமல்ஹாசன் திருத்துவதை போல இங்கு போதைக்கு அடிமையான சீர்திருத்தப் பள்ளி சிறுவர்களை விஜய் திருத்துவார். இதுபோல் இன்னும் பல காட்சிகளை சொல்லி கொண்டே போகலாம்.

இந்த படத்தில் காவல்நிலையத்தில் நடக்கும் சண்டை காட்சியில் ஜெ.டி தன் கையில் இருக்கும் காப்பை கழட்டி எதிராளிகளை அடிப்பது சத்யா படத்தில் கமல்ஹாசன் நடித்த இதே போன்ற ஒரு காட்சியை நினைவு படுத்தும். இப்படி பல தருணங்களில் உலகநாயகனை மனதில் வைத்தே காட்சிகளை எடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கடந்த வருடம் அவரை வைத்தே விக்ரம் என பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுத்து தன் குருவுக்கு பெருமை தேடித் தந்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...