தல அஜீத்-க்கு பின்னணி பாடிய உலக நாயகன் : இந்தப் படத்துல இவ்வேளா ஸ்பெஷல் இருக்கா?

உலக நாயகன் கமல்ஹாசன் தல அஜீத்-க்கு பின்னணி பாடியுள்ளார் என்று கேட்டதும் வியப்பாகத் தோன்றுகிறது அல்லவா. ஆம் அப்படி ஒரு சுவாரஸ்ய நிகழ்வு நடந்த திரைப்படம் தான் உல்லாசம்.

இரட்டை இயக்குநர்களான ஜே.டி. ஜெர்ரியின் இயக்கத்தில் உருவான திரைப்படம் உல்லாசம். சமீபத்தில் வெளியான தி லெஜண்ட் திரைப்படம் இவர்களின் இயக்கத்தில் உருவானதுதான். உல்லாசம் படத்தில் அஜீத், மகேஸ்வரி நடிக்க அப்போது தான் வளர்ந்து வந்த ஹீரோவான விக்ரம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இவ்வாறு இருக்க இத்திரைப்படத்தில் உருவான பாடலுக்கு அஜீத்துக்காக கமல்ஹாசன் பின்னணி பாடியிருப்பார்.

இந்தப் பட ஷுட்டிங் போதுதான் அஜீத்க்கு பைக் விபத்தில் காயமுற்று முதுகில் அறுவை சிகிச்சை செய்து பின் மீண்டும் பீனிக்ஸ் பறவையாக எழுந்து தொடர் வெற்றிகளைக் கொடுத்து தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகனாக உருவெடுத்தார்.

சினிமாவின் உச்சத்தில் இருந்த உலக நாயகனை இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா பாட வேண்டும் என்று வேண்டுகோள் வைக்க தல அஜீத்துக்காக அந்தப் பாடலை பாடியிருக்கிறார் உலக நாயகன். அந்தப் பாடல் தான் உல்லாசம் படத்தில் இடம் பெற்ற முத்தே முத்தம்மா முத்தம் ஒன்று தரலாமா பாடல். கமல்ஹாசனுடன், ஸ்வர்ணலதா, பவதாரணி ஆகியோரும் இப்பாடலுக்கு பின்னணி பாடியிருப்பார்கள்.

500 படங்கள்.. 4 தலைமுறை நடிகர்களுடன் நடிப்பு.. பஞ்சாயத்து தலைவர்.. நடிகர் கரிக்கோல் ராஜு திரைப்பயணம்..!

வழக்கமாக தனது படங்களில் உள்ள பாடல்களுக்கு மட்டுமே பின்னணி குரல் கொடுத்த கமல்ஹாசன் அப்போது இளையராஜா குடும்பத்துடன் நெருக்கமாக இருந்த நேரத்தில் மகன் கார்த்திக் ராஜாவுக்காக இப்பாடைலைப் பாடியிருக்கிறார். இது மட்டுமல்லாமல் உலக நாயகன், தனுஷுக்காக மற்றொரு பாடலையும் பாடியிருப்பார்.

புதுப்பேட்டை படத்தில் இடம்பெறும் நெருப்பு வாயினில் பாடலை யுவன்சங்கர்ராஜா இசையில் பாடியிருப்பார்.  இவ்வாறு இளையராஜா மட்டுமல்லாது அவரின் வாரிசுகளுக்கும் பின்னணி பாடி அசத்தியுள்ளார் உலக நாயகன்.

இதேபோல தளபதி விஜய்யும் சூர்யாவுக்காக பரணி இசையில் பெரியண்ணா படத்தில் இடம்பெற்ற நாம் தம் அடிக்கிற பாடலையும் பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு பல பாடல்களின் பின்னணியில் பல சுவாரஸ்ய வரலாறு இருக்கிறது என்பது இளைய தலைமுறை அறியாத விஷயம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews