சிவாஜி பிலிம்ஸ் தயாரித்த முதல் படமே இந்தி படமா..? கடைசியாக தயாரித்தது அஜித் படம்..!

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இந்திய திரை உலகின் மிகச்சிறந்த நடிகர் என்பது தெரிந்ததே. அவர் தனது சிவாஜி பிலிம்ஸ் மற்றும் சிவாஜி புரடொக்சன்ஸ் என்ற பெயரில் சில வெற்றி படங்களையும் தயாரித்துள்ளார்.

கடந்த 1958 ஆம் ஆண்டு சிவாஜி பிலிம்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி அதன் மூலம் தயாரித்த முதல் திரைப்படம் ஹிந்தி படம். அந்த படத்தில் சிவாஜி கணேசன் நடிக்கவில்லை.

எம்ஜிஆர் படங்களில் நடித்து எம்.எல்.ஏ ஆன காமெடி நடிகர்.. தமிழக அரசியலில் ஒரே துணை அமைச்சர்..!

அமர்தீப் என்று டைட்டில் வைக்கப்பட்டிருந்த இந்த திரைப்படத்தில் தேவானந்த், வைஜெயந்திமாலா, பத்மினி, ராகினி உள்பட பலர் நடித்திருந்தார்கள். சிவாஜி கணேசன் நடித்த உத்தமபுத்திரன் உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கிய பிரகாஷ் ராவ் தான் இந்த படத்தையும் இயக்கி இருந்தாராம்.

சிவாஜி பிலிம்ஸ் நிறுவனம் புதிய பறவை, தெய்வமகன், வியட்நாம் வீடு, தங்க பதக்கம், அண்ணன் ஒரு கோயில் உள்பட பட திரைப்படங்கள் தயாரித்தது. சிவாஜி பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட அனைத்து படங்களுமே கிட்டத்தட்ட வெற்றி படங்கள்.

சிவாஜி பிலிம்ஸ் என்ற நிறுவனத்தை சிவாஜி புரடொக்சன்ஸ் என்று பெயர் மாறிய பிறகு திரிசூலம், ரத்தபாசம், வா கண்ணா வா, சந்திப்பு, நீதியின் நிழல், அறுவடை நாள், ஆனந்த கண்ணீர், என் தமிழ் என் மக்கள் போன்ற படங்கள் தயாரிக்கப்பட்டன.

காவல் அதிகாரி பணியை விட்டுவிட்டு நடிப்பு.. வினு சக்கரவர்த்தியின் திரை பயணம்..!

இதில் திரிசூலம், சந்திப்பு ஆகிய படங்கள் தவிர அனைத்தும் தோல்வி படங்கள். குறிப்பாக சிவாஜி கணேசன் தமிழக முன்னேற்ற முன்னணி என்ற அரசியல் கட்சியை தொடங்கி அந்த கட்சியின் விளம்பரத்திற்காகவே எடுத்த படம் தான் என் தமிழ் என் மக்கள். இந்த படம் மிகப்பெரிய தோல்வி அடைந்தது.

அதன் பிறகு இந்த நிறுவனம் நீண்ட காலத்திற்கு பின்னர் லாபத்தின் பக்கம் சென்றது. கமல்ஹாசன் பிரபு நடித்த வெற்றி விழா திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதனை அடுத்து ரஜினிகாந்த் நடித்த மன்னன் கமல்ஹாசன் நடித்த கலைஞன் ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி ஆகிய திரைப்படங்கள் நல்ல வெற்றியை பெற்றது.

ஷாருக்கானா? பிரபாஸா? மாளவிகா மோகனின் பதிலால் ரசிகர்கள் டென்ஷன்!

கடந்த 2010 ஆம் ஆண்டு அஜீத் நடித்த அசல் என்ற திரைப்படத்தை சிவாஜி புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்தது. இந்த படம் படுதோல்வி அடைந்ததை அடுத்து அதன் பிறகு சிவாஜி புரொடக்ஷன் நிறுவனம் படங்களை தயாரிப்பதை நிறுத்திவிட்டது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews