ஷாருக்கானா? பிரபாஸா? மாளவிகா மோகனின் பதிலால் ரசிகர்கள் டென்ஷன்!

Malavika mohanan: தளபதி விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் இணைந்து நடித்திருந்தார் மாளவிகா மோகனன். மலையாளத்தில் அவர் நடித்து வெளிவந்த கிறிஸ்டி படம் நல்ல வரவேற்பினை பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

அப்படம் தோல்வியடைந்தது. பா.ரஞ்சித் இயக்கத்தில், விக்ரமுடன் ’தங்கலான்’ படத்தில் நடித்துவருகிறார் மாளவிகா மோகனன். சமூக வலைதளங்களில் ஆக்டிவ் ஆக இருப்பவர் மாளவிகா மோகனன். அவரின் எக்ஸ் பக்கத்தில் ரசிகர் ஒருவர், சாலார் மற்றும் டன்கி பற்றி உங்களின் கருத்தினை கூறுமாறு கேட்டுள்ளார். அதற்கு மாளவிகா மோகனன், இரண்டு படங்களையுமே பார்ப்பதற்கு ஆவலாக உள்ளது இருப்பினும், இரண்டு படங்களில் எதாவது ஒன்றை மட்டும் தேர்வு செய்ய வேண்டுமானால் ’டன்கி’யைக் காட்டிலும், ’சலார்’ தான் தனக்கு பிடித்துள்ளது. ’சலாரி’ன் டீசரில், பிரபாஸ் மற்றும் பிருத்திவிராஜினை பார்பதற்கு நன்றாக உள்ளது என்று பதிலளித்துள்ளார்.

salaar

இதனைப் பார்த்த ஷாருக்கான் ரசிகர்கள் ஆவேசம் அடைந்து, பிரபாஸின் ரசிகர்களுடன் சண்டையிடத் தொடங்கினர். மாளவிகா மோகனனுக்கு ரசனையே இல்லை என ஷாருக்கானின் ரசிகர்கள் அவரைத் திட்டி கமெண்ட் செய்ய ஆரம்பித்தனர். மறுபுறம், பிரபாஸின் ரசிகர்கள் மாளவிகா மோகனன் சலாரைத் தேர்வு செய்ததற்காகப் அவரைப் பாராட்டி வருகின்றனர்.

’RRR’, ’காந்தார’, ’பாகுபலி’ போன்ற தென்னிந்தியப் படங்கள் பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து ஹிட் அடித்தன. பாலிவுட்டில் சரியான வெற்றிப்படங்கள் வெளிவராத நிலையில், நீண்ட இடைவெளிக்குப்பின், ஷாருக்கானுக்கு அந்த சிறப்புக் கிடைத்துள்ளது. ஜவானுக்கு முன் ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம் இணைந்து நடித்த ’பதான்’ ஓரளவிற்கான லாபத்தை பெற்றுக் கொடுத்தது.

இருப்பினும் அட்லி இயக்கத்தில் அனிருத் இசையில், ஷாருக்கான் நயன்தாரா நடித்த, ’ஜவான்’ திரைப்படம் உலகம் முழுவதிலிருந்தும் ரூ. 1000 கோடி வசூல் செய்தது. இந்த மாபெரும் வெற்றியே ஷாருக்கான் எப்போதுமே கிங் என்பதை நிறுபித்துள்ளது. ஷாருக்கானுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். பாலிவுட்டின் வசூல் மன்னன் அழைக்கப்படும் ஷாருக்கானுக்கு நீண்ட இடைவெளிக்குப் பின் அந்த பாரட்டினை பெற்றுக் கொடுத்துள்ள படம் ‘ஜவான்’.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...