7 வருஷமா சாப்பாட்டில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்த மனைவி.. அதிர்ச்சியில் உறைந்துபோன கணவன்!

கேரள மாநிலத்தின் கோட்டயத்தில் வசித்து வருபவர் சதீஷ், இவருக்கும் ஆஷா என்ற பெண்ணுக்கும் 2006 ஆம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் உறவினர் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.

தன் கணவனைக் கட்டுக்குள் வைக்க எண்ணிய பெண் தன் அம்மா கொடுத்த ஐடியாவின்படி தன்னுடைய கணவருக்கு தினமும் இரவு உணவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்துள்ளார்.

தினமும் தூக்க மாத்திரை கலந்த உணவைச் சாப்பிட்ட கணவர் சோர்வுற்று தூங்கியுள்ளார்.

இவருக்கு ஏற்கனவே நீரிழிவு நோய் உள்ள நிலையில் இதுகுறித்து மருத்துவரிடம் கூறியபோதும், மருத்துவர்களால் இதற்கான காரணத்தை கண்டறிய முடியவில்லை.

அவ்வப்போது பணி நிமித்தமாக ஹோட்டல்களிலும் அவர் உணவு அருந்தியுள்ளார், ஹோட்டலில் சாப்பிட்டபோது அவருக்கு அதுபோன்ற உடல் சோர்வு ஏற்படாததையடுத்து மனைவி மீது சந்தேகம் எழுந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து வீட்டில் கேமரா பொருத்திய சதீஷுக்கு தன் மனைவி தன்னுடைய சாப்பாட்டில் பல மாத்திரைகள் கலப்பதைப் பார்த்து ஷாக் ஆகியுள்ளார்.

இதுகுறித்து போலீசில் புகார் அளிக்க, போலீசார் ஆஷாவைக் கைது செய்து விசாரணை செய்தனர். விசாரணையின் கணவனைக் கட்டுக்குள் வைக்கவே இப்படி செய்ததாக ஆஷா ஒப்புக் கொண்டுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.